பாண்டியன் ஸ்டோஸ் 2 சீரியலில் நடிக்க நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Nirosha Salary: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் நடித்து வரும் நடிகை நிரோஷாவின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், அய்யனார் துணை, மகாநதி, அன்புடன் கண்மணி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட அணைத்து சீரியல்களுக்கும் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டாரம் உண்டு. 2018-ஆம் ஆண்டு, 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் துவங்கப்பட்ட நிலையில், 2023-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ஆவது பாகம்:
இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, இதன் இரண்டாவது பாகம் புதிய கதைக்களத்தில், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை' என்கிற பெயரில் துவங்கப்பட்டது. முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்து ஸ்டாலின் முத்து இந்த பாகத்தில் 3 ஆண் பிள்ளைகள் மற்றும் 2 மகள்களுக்கு ஸ்ட்ரிக்ட் அப்பாவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 80'ஸ் காலகட்டத்தில் ஹீரோயினாக கலக்கிய நிரோஷா நடித்து வருகிறார்.
மனம் கவர்ந்த கோமதி கதாபாத்திரம்:
திரைப்படங்களில் கூட இவருக்கு கிடைக்காத வரவேற்பும், பாராட்டுகளும் நிரோஷாவுக்கு கோமதி கதாபாத்திரத்திற்காக கிடைத்து வருகிறது. திருமணம் ஆன பெண்கள் பலர், தங்களுக்கு இப்படி ஒரு மாமியார் இல்லையே என ஏங்க வைத்துள்ளார் நிரோஷா என்றே கூறலாம்.
நிரோஷாவின் சம்பளம்:
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தற்போது நிரோஷா இந்த சீரியலில் நடிக்க வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் நடிக்க, நிரோஷாவுக்கு ரூ.18,000 சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஒரு மாதத்தில், 20 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கும் நிலையில்... இவருக்கு ஒரு மாதத்திற்கு சம்பளமாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் வரை வாங்குவதாக கூறப்படுகிறது.