Asianet News TamilAsianet News Tamil

புருஷனுக்காக ஈஸ்வரி எடுக்கும் முடிவு.. அதிர்ச்சியில் ஜனனி! குலுங்கி அழும் குணசேகரன்.. 'எதிர்நீச்சல்' எபிசோட்!

குணசேகரனை காப்பாற்ற ஈஸ்வரி அதிரடி முடிவெடுக்க, இதனால் ஜனனி அதிர்ச்சியாவதும் தன்னுடைய மானம் போய் விட்டதாக குணசேகரன் குலுங்கி குலுங்கி அழுவது பற்றிய காட்சிகள் தான் இன்றைய புரோமோவில்  இடம்பெற்றுள்ளது.
 

Eshwari decides to meet Jeevanandam for her husband Gunasekaran today episode
Author
First Published Jul 28, 2023, 3:04 PM IST

சன் டிவி தொலைக்காட்சியில் ஜீவானந்தம் என்ட்ரிக்கு பின்னர் 'எதிர்நீச்சல்' சீரியலின் வேகம் சற்று குறைந்து விட்டதாக ரசிகர்கள் வருத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது யாரும் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் அரங்கேறி ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

யாருக்கும் அடங்காமல் நானே ராஜா... நானே மந்திரி... என ஆணாதிக்கம் கொண்ட மனிதராக அனைவரையும் உருட்டி மிரட்டிக்கொண்டிருந்த குணசேகரன் தற்போது அப்பத்தாவின் 40 சதவீத சொத்தை அனாமத்தாக ஜீவானந்தத்திடம் பறி கொடுத்து விட்ட நிலையில், ஆடிட்டர் தற்போது தங்கியுள்ள வீடும் ஜீவானந்தத்தின் பங்கில் தான் வருகிறது எனக் கூறியதும், நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சரிந்தார். 

Eshwari decides to meet Jeevanandam for her husband Gunasekaran today episode

டூ மச் கவர்ச்சி... உள்ளாடை போடாமல் கோட் அணிந்து மோசமான கிளாமரில் காஜல்! ஷாக்காக்கிய போட்டோஸ்!

பின்னர் அவரை ஒரு வழியாக கதிரும் - கரிகாலனும் பைக்கில் ஏற்றி சென்று மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்,  குணசேகரனை பார்க்க ஈஸ்வரி, நந்தினி மற்றும் ஜனனி ஆகியோர் மருத்துவமனைக்கு வர... அவர்களை குணசேகரனை  பார்க்க விடாமல் தடுக்கிறார் கதிர். மேலும் ஆபத்தான கட்டத்தில் குணசேகரன் இருப்பதை அறிந்து கொண்ட நந்தினி, ஈஸ்வரி, மற்றும்  ஜனனி ஆகிய மூவரும் எப்படியும் ஜீவானந்தத்திடம் இருந்து, அந்த 40 சதவீத சொத்தை நாம் மீட்டு வந்தால் மட்டுமே குணசேகரனை காப்பாற்ற முடியும் என நம்புகின்றனர். எனவே ஜீவானந்தத்தை சந்திக்க முடிவு செய்கிறார்கள்.

ஈஸ்வரி ஏன் கௌதமிடம் பேசி ஜீவானந்தத்தை பார்க்க ஏற்பாடு செய்ய சொல்ல கூடாது என கேட்கிறார். அதற்கு ஜனனி என்னால் முடியாது என மறுக்க, ஈஸ்வரி தன்னுடைய கணவருக்காக நான் பேசுகிறேன் என கூறுவதால் ஜனனி அதிர்ச்சியடைகிறார். 

Eshwari decides to meet Jeevanandam for her husband Gunasekaran today episode

நான் 12 திருமணம் செஞ்சு வச்சிருக்கேன்! என் தங்கச்சி ஸ்ரீதேவி செம்ம பிராடு! பல உண்மைகளை உடைத்த வனிதா விஜயகுமார்

மேலும் நேற்றைய தினம் குணசேகரின்  ஒரு கை மற்றும் ஒரு கால் செயல் இழந்து விட்டதாக மருத்துவர் கூறியது யாருமே எதிர்பாராத ஒன்று எனலாம். தற்போது தன்னுடைய தம்பிகளிடம் என்னை எப்படிப்பா இங்க கொண்டு வந்தீங்க என குணசேகரன் கேட்க, அதற்க்கு கரிகாலன் மாமா உன்ன பைக்ல வச்சு தான் இங்க கொண்டு வந்தோம். எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் நீ... உனக்கு இந்த நிலைமையா என அழுகிறார். இதை கேட்டு குணசேகரன் என்னுடைய மானத்தை நார் நார்ரா கிழிச்சிடீன்களே டா என கண்ணீர் விடுகிறார். இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிவடைந்துள்ளது.

Eshwari decides to meet Jeevanandam for her husband Gunasekaran today episode

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இப்படியா நடக்கணும்..? அலறி அடித்துக்கொண்டு ஓடிய டாப்ஸி! வைரலாகும் வீடியோ

எனினும் இன்றைய தினம் கௌதமின் உதவியோடு ஈஸ்வரி, நந்தினி, ஜனனி ஆகியோர் ஜீவானந்தத்தை சந்திப்பார்களா? அப்படியே இவர்கள் மூன்று பேரும் சொத்தை கேட்டு சண்டை போட்டால் ஜீவானந்தம் அதனை கொடுத்து விடுவாரா? என பல கேள்விகள் எழுந்தாலும்... என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow Us:
Download App:
  • android
  • ios