நான் 12 திருமணம் செஞ்சு வச்சிருக்கேன்! என் தங்கச்சி ஸ்ரீதேவி செம்ம பிராடு! பல உண்மைகளை உடைத்த வனிதா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமார் தற்போது தன்னுடைய தங்கைகள் குறித்தும், இதுவரை 12 பேருக்கு காதல் திருமணம் செய்து வைத்துள்ளதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தளபதி விஜய்க்கு ஜோடியாக 'சந்திரலேகா' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், மஞ்சுளா - விஜயகுமார் நச்சத்திர ஜோடிகளின் மூத்த மகளான வனிதா விஜயகுமார். எண்ணி சரியாக 5 படங்களே நடித்த இவர், பின்னர் நிரந்தரமாக திரையுலகிற்கு டாட்டா காட்டிவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
திருமணத்திற்கு பின்னர், குழந்தை குடும்பம் என பொறுப்பான மனைவியாகவும், அன்பான தாயாகவும் இருந்து வந்த வனிதா விஜயகுமாரின் வாழ்க்கையில் ஒரு சில பிரச்சனைகள் புயலாக அடிக்க, முதல் கணவர் ஆகாஷிடம் இருந்து விவாகரத்து பெற்று, அதே ஆண்டு ஆனந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் கணவர் மூலம் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை வனிதாவுக்கு பிறந்த நிலையில், இரண்டாவது கணவர் மூலம் ஒரு மகள் உள்ளார்.
இரண்டாவது கணவரிடம் இருந்தும், விவாகரத்து பெற்ற வனிதா விஜயகுமார் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் தானே வளர்க்க வேண்டும் என விரும்பிய நிலையில், வனிதாவின் மகன் விஜய ஹரி அப்பாவுடன் இருக்க வேண்டும் என விரும்பியதால் நீதிமன்றமும் அதற்கு அனுமதி வழங்கியது. எனவே நிரந்தரமாக வனிதாவிடம் இருந்து விலகி விஜய ஹரி அவரின் தந்தையிடம் வளர்ந்து வருகிறார். அதேபோல் வனிதாவுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த மகள் ஜோவிக்கா தற்போது வனிதாவுடன் வசித்து வருகிறார். இரண்டாவது கணவர் மூலம் பிறந்த மகள் ஜெயனித்தா.. தந்தையுடன் வசித்து வந்தாலும், அவ்வபோது வனிதாவை வந்து சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் சில காதல் மற்றும் திருமண சர்ச்சையில் சிக்கிய வனிதா அதில் இருந்து மீண்டு... தற்போது திரையுலகில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் வனிதா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய தங்கைகள் குறித்தும், காதல் திருமணத்திற்கு நான் எதிரி இல்லை என்பதை கூறும் விதமாகவும் பேசி உள்ளது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இப்படியா நடக்கணும்..? அலறி அடித்துக்கொண்டு ஓடிய டாப்ஸி! வைரலாகும் வீடியோ
வனிதா தன்னுடைய இரண்டு தங்கைகள் குறித்து பேசிய போது, சிறு வயதிலிருந்தே என்னுடைய அம்மா மஞ்சுளா என்னையும் என் தங்கை பிரீத்தாவையும் அடித்து தான் வளர்த்தார். ஆனால் மூன்றாவது தங்கையான ஸ்ரீதேவியை மட்டும் அவர் எப்போதுமே அடிக்க மாட்டார். அதற்கு காரணம் குழந்தையிலிருந்து ஸ்ரீதேவி மிகவும் கோபப்படுபவர். ரூமுக்குள் சென்று கதவை தாப்பா போட்டுக் கொள்வார். கண்ணில் பட்ட எல்லா பொருட்களையும் போட்டு உடைப்பார். சிறுவயதிலிருந்தே ஸ்ரீதேவி சரியான பிராடு நல்ல ட்ராமா செய்து எல்லாரையும் ஏமாற்றி விடுவார். அதனால் ஸ்ரீதேவியை மட்டும் யாருமே அடிக்க மாட்டார்கள் என இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் பலரும் நான் காதலை பிரித்து விடுவேன் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நான் காதலுக்கு எதிரி இல்லை. இதுவரை 12 பேருக்கு காதல் திருமணங்களை செய்து வைத்துள்ளேன் என்று வனிதா கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மகன் ஸ்ரீஹரி மற்றும் மகள்கள் ஜோவித்தா மற்றும் ஜெயனித்தா ஆகியோர் கண்டிப்பாக சினிமாவுக்கு வருவார்கள் என வனிதா இந்த பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனின் வருங்கால மனைவி யார் தெரியுமா? வெளியான தகவல்!