பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இப்படியா நடக்கணும்..? அலறி அடித்துக்கொண்டு ஓடிய டாப்ஸி! வைரலாகும் வீடியோ
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போது... நடிகை டாப்ஸி அலறி அடித்துக்கொண்டு ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி, 6 தேசிய விருதுகளை பெற்ற 'ஆடுகளம்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி. முதல் படத்திலேயே, தன்னுடைய எளிமையான அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த டாப்ஸி அடுத்தடுத்து காஞ்சனா, கேம் ஓவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இருப்பினும் டாப்ஸி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது 'ஆடுகளம்' படமாக தான் இருக்கும்.
சமீப காலமாக தென்னிந்திய மொழி படங்களை விட பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வரும் டாப்ஸி, தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் நடித்த சாண்ட் கி அங்கா (Saand Ki Aankh), தப்பாட், ராஷ்மி ராக்கெட், தூபார பிளர், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவரின் கைவசம் மூன்று ஹிந்தி படங்கள் உள்ளன. 35 வயதான நடிகை டாப்ஸி கடந்த ஆண்டு ஒருவரை காதலிப்பதாக கூறிய நிலையில், இவரின் திருமணம் குறித்து சமீபத்தில் கேள்வி எழுப்பியபோது, இன்னும் நான் கர்ப்பமாக ஆகவில்லை என கூறி அதிர்ச்சி கொடுத்தார். அதாவது கர்ப்பமான பின்பே திருமணம் செய்து கொள்வேன் என்பது போல் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது டாப்ஸி, அவரின் ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பார்ட்டி பேப்பரை முறுக்கி உடைக்க, அது வெடித்த சத்தத்தை கேட்டு, டாப்ஸி அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார். இந்த வீடியோவை தான் தற்போது அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.