வெகேஷனில் சமந்தாவுக்கு கிடைத்த புது தோழன்..! ரொம்ப குடுத்துவச்சவர்... பொறாமையில் பொங்கிய நெட்டிசன்ஸ்!
நடிகை சமந்தா தற்போது வெக்கேஷனுக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு தன்னுடைய புதிய தோழர் ஒருவருடன் க்யூட்டாக எடுத்துக் கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு நெட்டிசன்களையும் பொறாமைப்பட செய்துள்ளது.
தென்னிந்திய திரையுலகில், திருமணம் ஆகி விவாகரத்து பெற்று பிரிந்த பின்னரும், தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவரும் சமந்தா.. கடந்தாண்டு மயோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, எழுந்து கூட நடக்க முடியாமல் ஆறு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்து சிகிச்சை பெற்ற நிலையில், அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்த பின்னரே பழைய நிலைக்கு திரும்பினார்.
கடும் வலி, வேதனைகளுக்கு நடுவே இவர் நடித்த 'சாகுந்தலம்' படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என சமந்தா நம்பிய நிலையில், இப்படம் படுதோல்வியை சந்தித்தது மட்டும் இன்றி, தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது.
விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனின் வருங்கால மனைவி யார் தெரியுமா? வெளியான தகவல்!
இதைத்தொடர்ந்து தற்போது சமந்தா நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக தெலுங்கில் 'குஷி' என்கிற படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக 'சீட்டாடல்' என்கிற வெப் சீரிஸிலும் நடித்துவந்தார். இந்த வெப் சீரிஸை அமேசான் பிரைம் ஓடிடி தளம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்த போதிலும், தற்போது வரை எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் உள்ள சமந்தா, தற்காலிகமாக திரையுலகில் இருந்து விலகி மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபட சிகிச்சை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்த சமந்தா, தற்போது தன்னுடைய வெக்கேஷனை கொண்டாட வெளிநாட்டுக்கு பறந்துள்ளார்.
ஹீரோயினை போல் இருக்கும் மகளுடன்... மாடர்ன் ட்ரெஸில் கலக்கும் சரண்யா பொன்வண்ணன்! வைரல் போட்டோஸ்!
இந்தோனேசியாவில் உள்ள பாலி நாட்டுக்கு சென்றுள்ள சமந்தா, அங்கிருந்து விதவிதமான புகைப்படங்களை எடுத்து அவ்வபோது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனக்கு கிடைத்த புதிய நண்பரான... குரங்குடன் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சமந்தாவின் தோல் மேல் அமர்ந்தபடி இந்த குரங்கு போஸ் கொடுக்க, நெட்டிசன்கள் சிலர் ரொம்ப கொடுத்து வச்ச குரங்கு என சற்று பொறாமையோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.