ஆதித்யா எல்-1 சூரியனுக்கு எவ்வளவு பக்கத்தில் போகும்? இதற்கு முன் மிக அருகில் சென்று ஆய்வு செய்தது யார்?

ஆதித்யா எல்1 பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளியில் நிலைநிறுத்தப்படும். இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரத்தில் 1 சதவீத தூரம் மட்டுமே!

Will ISRO's Aditya L1 touch the Sun? No. Which solar probe has come closest sgb

இஸ்ரோவின் ஆதித்யா எல்1 சனிக்கிழமை ஏவப்பட உள்ளது. சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது போல ஆதித்யா எல்1 சூரியனில் தரையிறங்காது. ஆனால் பூமி மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருக்கும் லாக்ரேஞ்ச் புள்ளி L1 பகுதியில் ஆதித்யா எல்1 நிலைநிறுத்தப்படும்.

ஆதித்யா எல்1 விண்கலத்தை ஏவுவதற்கான ஏற்பாடுகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், சனிக்கிழமையன்று சூரியனை நோக்கிப் புறப்பட அனைத்தும் ஆயத்தமாக உள்ளதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. நாளை ஏவுவதற்கான ஏவுகணை ஒத்திகை முடிந்திருப்பதாவும் கூறியுள்ள இஸ்ரோ, பிஎஸ்எல்வி-சி57 (PSLV-C57) ராக்கெட்டின் படங்களையும் வெளியிட்டுள்ளது.

ஆதித்யா எல்1 முக்கிய ஆய்வுக் கருவியை வடிவமைத்தது யார்? இதுதான் ரொம்ப முக்கியம்? இஸ்ரோ விளக்கம்

ஆதித்யா எல்1 திட்டம் இஸ்ரோவின் 59வது விண்வெளி திட்டம் ஆகும். இதன் மூலம் இந்தியா சூரியனை ஆய்வு செய்யும் முதல் பயணத்தைத் தொடங்குகிறது. 

Will ISRO's Aditya L1 touch the Sun? No. Which solar probe has come closest sgb

லாக்ரேஞ்ச் புள்ளியில் நிலைநிறுத்தப்படும் ஆதித்யா எல்1 பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ பயணிக்க உள்ளது. இந்தப் பயணத்திற்கு 4 மாதங்கள் அல்லது 125 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள மொத்த தூரம் 150 மில்லியன் கிமீ. ஆனால், ஆதித்யா எல்1 அதில் 1 சதவீத தூரம் மட்டுமே பயணிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நான் ரெடி தான்... சூரியனை ஆய்வு செய்ய தயாராக இருக்கும் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம்!

நாசாவின் பார்க்கர்

டிசம்பர் 2021 இல் தான் வரலாற்றில் முதல் முறையாக ஒரு விண்கலம் சூரியனைத் தொட்டது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய விண்கலமான பார்க்கர் கரோனா எனப்படும் சூரியனின் மேல் வளிமண்டலத்தில் நுழைந்து, அங்கே இருக்கும் துகள்கள் மற்றும் காந்தப்புலங்களைப் பற்றி தகவல்களைப் பதிவு செய்தது. பார்க்கர் விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 7.8 மில்லியன் கிலோமீட்டர் தூரம் வரை சென்றது.

அப்போதிருந்து, பார்க்கர் சூரியனைச் சுற்றியுள்ள பெரிய நீள்வட்ட சுற்றுப்பாதையில் இயக்கி வருகிறது. படிப்படியாக ஒவ்வொரு சுற்றுப்பாதையாக முன்னேறி, ஏராளமான தரவுகளை வெளியிட்டு வருகிறது.

சூரியனை நோக்கி 1.5 மில்லியன் கி.மீ. பயணிக்கும் ஆதித்யா எல்1! என்னென்ன ஆய்வுகள் செய்யும்?

Will ISRO's Aditya L1 touch the Sun? No. Which solar probe has come closest sgb

பார்க்கர் விண்கலம் எவ்வளவு அருகில் செல்லும்?

தற்போது, சூரியனைச் சுற்றிவரும் நாசாவின் பார்க்கர் விண்கலம் பூமியில் இருந்து சுமார் 50 மில்லியன் கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சூரியனுடனை பக்கத்தில் சந்திக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தற்போது வெள்ளி கிரகத்துக்கு அருகில் சுற்றி வருகிறது.

நாசாவின் சமீபத்திய தகவலின்படி, பார்க்கர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வெள்ளி கிரகத்தை வெற்றிகரமாகக் கடந்து சென்றுவிட்டது. அடுத்து சூரியனை நெருங்கும்போது வரவிருக்கும் சோதனையை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. இதுவரை சூரியனின் மிக அருகில் உள்ள சுற்றுப்பாதையில் பார்க்கர் இயங்கியவருகிறது என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

சந்திரயான்-3 வெற்றிக்குப் பின் ஆதித்யா L1! சூரியனை நோக்கி அடுத்த டார்கெட்! இஸ்ரோ தலைவர் சோமநாத் விளக்கம்

புதனுக்குப் பக்கத்தில் பார்க்கர்!

நாசா நிறுவனம் பார்க்கர் விண்கலத்துக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரத்தை படிப்படியாகக் குறைக்து வருகிறது. இறுதியில் சூரியனின் மேற்பரப்பில் இருந்து 6.16 மில்லியன் கிலோமீட்டர் தொலைவை எட்ட திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதன் மூலம் புதன் கோளின் சுற்றுப்பாதைக்கு அருகில் பார்க்கர் விண்கலம் சென்றுவிடும். சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட எந்த விண்கலத்தையும் விட ஏழு மடங்கு அருகில் செல்ல நாசா திட்டம் வகுத்துள்ளது.

ஜூன் 2025 இல் நாசாவின் பார்க்கர் விண்கலம் சூரியனைச் சுற்றி மணிக்கு சுமார் 692,000 கிமீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும். இந்த வேகத்தில் பயணித்தால் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் நகரை இரண்டே வினாடிகளில் எட்டிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1! செப். 2ஆம் தேதி ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவிப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios