சூரியனை நோக்கி 1.5 மில்லியன் கி.மீ. பயணிக்கும் ஆதித்யா எல்1! என்னென்ன ஆய்வுகள் செய்யும்?

ஆதித்யா எல்1 விண்கலத்தில் சூரியனின் கரோனா, குரோமோஸ்பியர், ஃபோட்டோஸ்பியர் மற்றும் சூரியக் காற்று ஆகியவற்றை ஆய்வு செய்ய ஏழு பேலோடுகள் பொருத்தப்பட்டிருக்கும்.

ISRO Sets Date For Its Solar Mission Aditya-L1: What Are Its Objectives sgb

நிலவின் தென் துருவத்திற்கு அருகில் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய பிறகு, இந்தியாவின் அடுத்த தேடல் சூரியனை நோக்கிப் பயணிக்கிறது. இஸ்ரோ தனது முதல் சூரியப் பயணத்தை மேற்கொள்ள ஆதித்யா-எல்1 விண்கலத்தை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இஸ்ரோவின் கூற்றுப்படி, ஆதித்யா-எல்1 விண்கலம் பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளியில் இருந்து சூரியனைக் கண்காணிக்கும்.

சூப்பர் புளூ மூன் பார்க்க நீங்க ரெடியா? அபூர்வ வானியல் நிகழ்வு... ஆகஸ்ட் 30 இல் மிஸ் பண்ணாதீங்க!

லாக்ரேஞ்ச் புள்ளி ஜோசப்-லூயிஸ் லாக்ரேஞ்ச் என்ற பிரெஞ்சு கணிதவியலாளரான ஜோசப்-லூயிஸ் லாக்ரேஞ்ச் நினைவாகப் பெயரிடப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் இந்த லாக்ரேஞ்ச் புள்ளிககள் முதன்முதலில் ஆய்வு செய்த அவர் விண்வெளியில் சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருக்கும் புள்ளிகளைக் கண்டறிந்தார். விண்கலத்தை இந்தப் பகுதியில் நிலைநிறுத்துவதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

ISRO Sets Date For Its Solar Mission Aditya-L1: What Are Its Objectives sgb

"லாக்ரேஞ்ச் புள்ளியில் நிலைநிறுத்தப்படும் செயற்கைக்கோள், கிரகணங்கள் போன்ற எந்த இடையூறுகளும் ஏற்படாமல் சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும். இதன் மூலம் சூரியனின் செயல்பாடுகளையும் விண்வெளியில் அதன் தாக்கத்தையும் எந்த நேரமும் கவனிக்க முடியும்" என்கிறது இஸ்ரோ.

ஆதித்யா எல்1 திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:

ஆதித்யா-எல்1 சூரியனின் மேல் வளிமண்டலம் (குரோமோஸ்பியர் மற்றும் கரோனா) மற்றும் சூரியக் காற்றுடன் அதன் தொடர்பு ஆகியவற்றை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய வளிமண்டலத்தில் பகுதியளவு அயனியாக்கம் செய்யப்பட்ட பிளாஸ்மாவின் இயற்பியல் குறித்து அறிந்துகொள்ளவது இதன் நோக்கம் ஆகும்.

விண்கலம் சூரிய கரோனாவை வெப்பமாக்கும் வழிமுறைகளை ஆராயும். கரோனல் மாஸ் எஜெக்‌ஷன்ஸ் (CMEs) மற்றும் சூரிய எரிப்புகளின் துவக்கம் மற்றும் வளர்ச்சியையும் கவனிக்கும்.

இது சூரியனுக்கு அருகில் உள்ள பிளாஸ்மா சூழலை ஆய்வு செய்து சூரிய கரோனாவில் உள்ள காந்தப்புலத்தை வகைப்படுத்தும். விண்வெளி வானிலை குறித்தும் ஆய்வு செய்யும்.

நிலவில் சீனாவின் ரோவரைச் மீட் பண்ணுமா இந்தியாவின் பிரக்யான் ரோவர்? நடக்கப்போவது என்ன?

ஆதித்யா எல்1 பேலோடுகள்:

ஆதித்யா எல்1 விண்கலத்தில் சூரியனின் கரோனா, குரோமோஸ்பியர், ஃபோட்டோஸ்பியர் மற்றும் சூரியக் காற்று ஆகியவற்றை ஆய்வு செய்ய ஏழு பேலோடுகள் பொருத்தப்பட்டிருக்கும். நான்கு ரிமோட் சென்சிங் பேலோடுகள் (VELC, SUIT, SoLEXS, HEL1OS) சூரியனின் வளிமண்டலத்தை ஒளியின் வெவ்வேறு அலைநீளங்களில் படம்பிடிக்கும். இதில் புற ஊதா மற்றும் எக்ஸ்-கதிர்கள் அடங்கும். ASPEX, PAPA, டிஜிட்டல் காந்தமானிகள் ஆகிய மேலும் மூன்று பேலோடுகள் சூரியக் காற்றையும் மகாந்தப்புலத்தை அளவிடும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios