நான் ரெடி தான்... சூரியனை ஆய்வு செய்ய தயாராக இருக்கும் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம்!
சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1 - பிஎஸ்எல்வி-சி 57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட தயாராக இருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது.
சந்திரயான்-3 பயணத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இது சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் முதல் திட்டம் ஆகும்.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இஸ்ரோ நிறுவனம், செப்டம்பர் 2ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரோ தனது சூரியப் பயணம் பற்றி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டில், சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1 - பிஎஸ்எல்வி-சி 57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட தயாராக இருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது.
நிலவு ஆய்வில் புதிய மைல்கல்! தென் துருவத்தில் சல்பர் இருப்பதை உறுதி செய்தது சந்திரயான்-3!
ஆதித்யா-எல்1 விண்கலத்தை விண்வெளிக்கு கொண்டு செல்லும் ராக்கெட்டின் தயார்நிலை புகைப்படத்தையும் இஸ்ரோ பகிர்ந்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலத்துடன் பிஎஸ்எல்வி-சி57 ஏவகணை விண்ணில் பாய உள்ளது.
பெங்களூருவில் உள்ள யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தால் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் இம்மாத தொடக்கத்தில் இஸ்ரோவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்தை வந்தடைந்தது.
ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருக்கும் L1 பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட உள்ளது. விண்கலம் இந்த L1 புள்ளியை அடைய விண்ணில் ஏவப்பட்டதில் இருந்து 125 நாள் ஆகும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
வாரத்துக்கு மூணு நாளாவது ஆபீசுக்கு வாங்க... அமேசான் சி.இ.ஓ. எச்சரிக்கையால் ஊழியர்கள் ஷாக்!
இஸ்ரோவின் கூற்றுப்படி, ஆதித்யா-எல்1 விண்கலம் பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளியில் இருந்து சூரியனைக் கண்காணிக்கும்.
லாக்ரேஞ்ச் புள்ளி ஜோசப்-லூயிஸ் லாக்ரேஞ்ச் என்ற பிரெஞ்சு கணிதவியலாளரான ஜோசப்-லூயிஸ் லாக்ரேஞ்ச் நினைவாகப் பெயரிடப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் இந்த லாக்ரேஞ்ச் புள்ளிககள் முதன்முதலில் ஆய்வு செய்த அவர் விண்வெளியில் சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருக்கும் புள்ளிகளைக் கண்டறிந்தார். விண்கலத்தை இந்தப் பகுதியில் நிலைநிறுத்துவதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கலாம்.
"லாக்ரேஞ்ச் புள்ளியில் நிலைநிறுத்தப்படும் செயற்கைக்கோள், கிரகணங்கள் போன்ற எந்த இடையூறுகளும் ஏற்படாமல் சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும். இதன் மூலம் சூரியனின் செயல்பாடுகளையும் விண்வெளியில் அதன் தாக்கத்தையும் எந்த நேரமும் கவனிக்க முடியும்" என்கிறது இஸ்ரோ.
விமானத்தில் 18+ ஏரியா அறிமுகம்! உல்லாசமாகப் பயணிக்க என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா?