நிலவு ஆய்வில் புதிய மைல்கல்! தென் துருவத்தில் சல்பர் இருப்பதை உறுதி செய்தது சந்திரயான்-3!
நிலவின் மேற்பரப்பில் சல்பர் (S) இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தியது என்றும் ஹைட்ரஜனை (H) தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றும் இஸ்ரோ தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள சந்திராயன் 3 பற்றிய சமீபத்திய அப்டேட்டில், நிலவில் அறிவியல் சோதனைகள் தொடர்கிறது என்று கூறியுள்ளது.
பிரக்யான் ரோவரில் உள்ள லேசர் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) கருவி தென் துருவத்திற்கு அருகிலுள்ள நிலவின் மேற்பரப்பில் சல்பர் (S) இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தியது என்றும் இஸ்ரோ கூறியிருக்கிறது.
விமானத்தில் 18+ ஏரியா அறிமுகம்! உல்லாசமாகப் பயணிக்க என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா?
"Al, Ca, Fe, Cr, Ti, Mn, Si மற்றும் O ஆகியவையும் எதிர்பார்த்தபடி கண்டறியப்பட்டுள்ளன. ஹைட்ரஜனை (H) தேடும் பணி நடைபெற்று வருகிறது" என்று இஸ்ரோ தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
இஸ்ரோவின் ஆதித்யா எல்1 சூரியனுக்கு எவ்வளவு அருகில் செல்லும்? என்னென்ன ஆய்வுகள் செய்யும்?
"வரைபடத்தில் காண்பிக்கப்பட்டுள்ள முதற்கட்ட ஆய்வுகள் மூலம் அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti) ஆகியவை நிலவின் மேற்பரப்பில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) ஆகியவை இருப்பதும் தெரிகிறது. ஹைட்ரஜன் இருப்பது குறித்து முழுமையான விசாரணை நடந்துவருகிறது" என்று இஸ்ரோ அறிக்கை கூறுகிறது.
நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கம், பிரக்யான் ரோவரின் இயக்கம் மற்றும் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் மூலம் அறிவியல் தரவுகளைப் பெறுதல் ஆகியவை சந்திரயான்-3 நிலவுப் பயணத்தின் மூன்று முக்கிய நோக்கங்கள் ஆகும். இதில், இரண்டு நோக்கங்கள் நிறைவேறிவிட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது. மூன்றாவது நோக்கம் நோக்கமான அறிவியல் ஆய்வுகள் நடந்துவருகின்றன.
சந்திரயான்-3 இன் விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE பேலோட் மூலம் அளவிடப்பட்ட நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாட்டின் வரைபடத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டரில் உள்ள பேலோட் நிலவின் மேற்பரப்புக்கு 10 செமீ ஆழம் வரை மட்டுமே ஆராயும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 லேண்டர் தொகுதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற சாதனையை இந்தியா தன்வசப்படுத்தியது. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவுக்குப் பிறகு நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக மென்மையான தரையிறக்கம் செய்த நான்காவது நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
போட்டி போட்டு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் ரெண்டு கம்பெனி! எது பெஸ்டுனு பாக்கலாமா?