வாரத்துக்கு மூணு நாளாவது ஆபீசுக்கு வாங்க... அமேசான் சி.இ.ஓ. எச்சரிக்கையால் ஊழியர்கள் ஷாக்!

அமேசான் சி.இ.ஓ. ஆண்டி ஜெஸ்ஸி அந்நிறுவனத்தின் ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வேலையை ராஜினாமா செய்துவிடுங்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

Back to office: Amazon CEO Andy Jassy has a 'warning' for employees sgb

அமேசான் சி.இ.ஓ. ஆண்டி ஜெஸ்ஸி அந்நிறுவனத்தின் ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வேலையை ராஜினாமா செய்துவிடுங்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களிடம் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இது ஊழியர்களால் எதிர்க்கப்பட்டது.சில ஊழியர்கள் அலுவலகத்துக்குத் திரும்புவதற்குப் பதிலாக ராஜினாமா செய்துவிட்டனர்.

விமானத்தில் 18+ ஏரியா அறிமுகம்! உல்லாசமாகப் பயணிக்க என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா?

இப்போது அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், ஊழியர்களை அலுவலகத்திற்குத் திரும்பவில்லை என்றால் அவர்களின் வேலை போய்விடும் என்று எச்சரித்துள்ளார்.

Back to office: Amazon CEO Andy Jassy has a 'warning' for employees sgb

கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் தனது ஊழியர்களை மே 2023 முதல் வாரத்தில் மூன்று நாட்களுக்கு அலுவலகத்திற்குத் திரும்ப உத்தரவிட்டது. கூகுள் போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரச் சொல்லி உத்தரவிட்டன. அதற்கு இணங்காதவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்கத் தொடங்கின.

இந்நிலையில் அமேசான் நிறுவனமும் அலுவலகத்திற்குத் திரும்ப மறுக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஜூலையில் கசிந்த தகவல்களின்படி, அலுவலகப் பணிக்குத் திரும்பாத பணியாளர்கள் தாமாகவே ராஜினாமா செய்யுமாறு கட்டாயப்படுத்துகிறது எனத் தெரிகிறது.

இந்நிலையில் தான் அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் நேரில் வருகைப்பதிவு இல்லாவிட்டால் வேலையில் தொடர்வதை மறந்துவிடுமாறு எச்சரிக்கை செய்தியை அனுப்பத் தொடங்கியுள்ளது.

சீனா மேப்பில் இந்தியப் பகுதியா? வெளுத்து வாங்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios