சீனா மேப்பில் இந்தியப் பகுதியா? வெளுத்து வாங்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
சீனா தங்கள் நாட்டின் வரைபடம் ஒன்றில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அக்சாய் சின் பிராந்தியத்தை சேர்த்திருப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் செவ்வாயன்று சீனா தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாக அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதியை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ "நிலையான வரைபடத்தை" வெளியிட்டதற்காக கண்டனம் தெரிவித்தார்.
சீனாவின் இந்த நடவடிக்கையை அவர்களின் வழக்கமான செயல் என்று கூறி கண்டித்துள்ள அமைச்சர் ஜெய்சங்கர், மற்ற நாடுகளின் பிரதேசங்களை வரைபடத்தில் சேர்ப்பதால் எதையும் மாற்ற முடியாது என்று கூறினார்.
தொலைக்காட்சி சேனலுக்குப் பேட்டியளித்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீனா தங்களுக்குச் சொந்தமில்லாத பகுதிகளைத் தங்களுடையது என்று கூறி வரைபடங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறது என்றார். "இது ரொம்ப காலமாக அவர்களின் பழக்கம். இந்தியாவின் சில பகுதிகளைச் சேர்ந்து வரைபடங்களை வெளியிடுவதால் எதுவும் மாறாது" என்றும் அவர் தெரிவித்தார்.
போட்டி போட்டு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் ரெண்டு கம்பெனி! எது பெஸ்டுனு பாக்கலாமா?
அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் கூறுகையில், இவ்வாறு அபத்தமாக உரிமைகோருவதன் மூலம் மற்ற நாடுகளின் பிரதேசங்கள் சீனாவுக்குச் சொந்தமாகிவிடாது என்று சாடினார்.
சைனா டெய்லி நாளிதழின்படி, திங்களன்று ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள டெக்கிங் கவுண்டியில் சர்வே மற்றும் மேப்பிங் தினம் மற்றும் கொண்டாடுவதை முன்னிட்டு சீனாவின் இயற்கை வள அமைச்சகம் சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிடப்பட்டது.
இவ்வாறு அருணாச்சல பிரதேசத்தின் மீது உரிமை கோரும் சீனாவை இந்தியா அடிக்கடி கண்டித்து வருகிறது. முன்னதாக, அருணாச்சல் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 11 இடங்களின் பெயரை சீனா தங்கள் இஷ்டப்படி மாற்றி அறிவித்தது. அதையும் இந்தியா கடுமையாக விமர்சித்தது.
இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தனது பகுதி என்று உரிமை கோருகிறது. இந்தியாவும் தொடர்ந்து பலமுறை மறுத்து வருகிறது.
விமானத்தில் 18+ ஏரியா அறிமுகம்! உல்லாசமாகப் பயணிக்க என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா?