Asianet News TamilAsianet News Tamil

இன்ஸ்டாவை போலவே வாட்ஸ்அப்-லும் Channel அம்சம் அறிமுகம்.. அது என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?

தற்போது இந்தியா மற்றும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் Channels என்ற புதிய ஒளிபரப்பு அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Whatsapp channels feauture available in india what is it how to use it?
Author
First Published Sep 14, 2023, 9:21 AM IST

உலகளவில் பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் நிறுவனம் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு பல்வேறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் Channels என்ற புதிய ஒளிபரப்பு அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ன்ஸ்டாகிராமில் உள்ள பிராட்காஸ்ட் சேனல் அம்சத்தைப் போலவே, மெட்டாவின் வாட்ஸ்அப் இப்போது பயனர்கள் Channel மூலம் அதிக குழுக்களுக்கு செய்திகளை அனுப்ப உதவுகிறது.

வாட்ஸ்அப் Channels வழக்கமான சேட்களில் இருந்து மாறுபட்டது. அது பின் தொடர்பவர்களின் அடையாளங்கள் மற்ற பின்தொடர்பவர்களுக்கு ரகசியமாக இருப்பதை உறுதிசெய்கிறது. மேலும் Channel என்பது ஒரு வழி ஒளிபரப்பு கருவியாக செயல்படுகின்றன. அட்மின், பின்தொடர்பவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் Channel, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளைப் பகிர உதவுகிறது.

வாட்ஸ் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “நாங்கள் இந்தியாவிலும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாட்ஸ்அப் Channels  என்ற அம்சத்தை தொடங்குகிறோம் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வாட்ஸ்அப் Channels 'ஒரு வழி’ ஒளிபரப்பு கருவியாகும், மேலும் வாட்ஸ்அப்பிற்குள்ளேயே உங்களுக்கு முக்கியமான நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து புதுப்பிப்புகளைப் பெறுவதற்கான தனிப்பட்ட வழியை வழங்குகிறது,” என்று தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப்பில் குரூப் சாட்டிங்கை எளிமையாக்க புதிய அப்டேட்! பயன்படுத்துவது எப்படி?

மேலும் “ இந்த புதிய Channels அம்சத்தை "அப்டேட்ஸ்" என்ற பிரத்யேக டேபில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் உலகளவில் விரிவுபடுத்தப்படுவதால், பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிய அப்டேட்களும் அறிமுகம் செய்யப்படுகிறது. பயனர்கள் இனி directory மூலம் சேனல்களைக் கண்டறியலாம். பயனர்கள் தங்கள் செயல்பாட்டு நிலை, பிரபலம் அல்லது புதியதன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சேனல்களை பிரவுஸ் செய்யலாம்.

இன்ஸ்டாகிராம் செயலியை போலவே, வாட்ஸ்அப் சேனல்களிலும், பயனர்கள் அப்டேட்களுக்கு ரியாக்‌ஷன் மூலம் பதிலளிக்கலாம். இமொஜியைப் பயன்படுத்தி கருத்துக்களை தெரிவிக்கலாம். ரியாக்‌ஷன்களின் மொத்த எண்ணிக்கை காட்டப்படும், ஆனால் நிர்வாகியின் தனிப்பட்ட ரியாக்‌ஷனை பின்தொடர்பவர்கள் பார்க்க முடியாது. வாட்ஸ்அப்பின் சர்வர்களில் இருந்து தானாக நீக்கப்படுவதற்கு முன், அட்மின்கள் 30 நாட்கள் வரை தங்கள் அப்டேட்களை எடிட் செய்யும் திறனை விரைவில் பெறுவார்கள்.

ஒரு அட்மின் தனது அரட்டைகள் அல்லது குழுக்களுக்கு ஒரு புதுப்பிப்பை அனுப்பும் போதெல்லாம், அது சேனலுக்கான இணைப்பைச் சேர்க்கும், மேலும் தகவல்களை மக்கள் எளிதாகக் கண்டறிய அனுமதிக்கும். சேனல்களில் செய்திகள் குவிவதைத் தடுக்க, வாட்ஸ் அப் தனது சர்வர்களில் சேனல் வரலாற்றை அதிகபட்சமாக 30 நாட்களுக்கு வைத்திருக்கும். கூடுதலாக, அட்மின்கள் தங்கள் சேனல்களுக்குள் ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் ஃபார்வர்டுகளை எடுப்பதைத் தடுக்கும் விருப்பமும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது..

ஐபோன் 15 சீரிஸில் USB-C சார்ஜிங் வந்தது ஏன்? ஐரோப்பிய யூனியன் போட்ட கறாரான கன்டிஷன் தான் காரணமாம்!

கூடுதலாக, வாட்ஸ்அப் அட்மின்களுக்கு தங்களின் சேனலை யார் பின்தொடரலாம் என்பதையும், தங்கள் சேனலை directory மூலம் யார் கண்டறிய வேண்டும் என்று விருப்பமும் கிடைக்கும். மேலும் சேனல்கள் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், சேனல்களின் முதன்மை நோக்கம் பரந்த பார்வையாளர்களை சென்றடைவதே ஆகும்.” என்று வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp சேனல்களை எப்படிபயன்படுத்துவது?

  • Google Play Store அல்லது App Store இலிருந்து உங்கள் WhatsApp செயலியை அதன் சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்யவும்.
  • வாட்ஸ்அப்பைத் திறந்து, ஸ்கிரீனின் அடிப்பகுதியில் உள்ள Updates என்ற டேப்-ஐ கிளிக் செய்யவும். நீங்கள் பின்தொடரக்கூடிய சேனல்களின் பட்டியலைக் காண்பீர்கள்.
  • சேனலைப் பின்தொடர, அதன் பெயருக்கு அடுத்துள்ள ‘+’ ஐகானை கிளிக் செய்யவும். அதன் சுயவிவரத்தையும் புரொஃபைல் பிக்சரையும் பார்க்க, சேனல் பெயரையும் கிளிக் செய்யலாம்.
  • சேனல் அப்டேட்க்கு ரியாக்‌ஷன் செய்ய விரும்பினார். அந்த செய்ட்தியை லாங் பிரஸ் செய்யவும்.
Follow Us:
Download App:
  • android
  • ios