Asianet News TamilAsianet News Tamil

வாட்ஸ்அப்பில் குரூப் சாட்டிங்கை எளிமையாக்க புதிய அப்டேட்! பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் குரூப் சாட்டிங்கை மேலும் எளிமையாக மாற்ற புதிய குரூப் ஃபில்டர் (Group Filter) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

WhatsApp may soon allow users to filter group chats: How will it work sgb
Author
First Published Sep 12, 2023, 6:02 PM IST

மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் அப்ளிகேஷன் பயன்பாட்டை மேம்படுத்த புதிய அம்சங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. சமீபத்திய தகவலின்படி, கூகுள் பிளே ஸ்டோரில் பீட்டா திட்டத்தில் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. குரூப் சாட்களை ஃபில்டர் செய்வதற்கான புதிய அம்சத்தை இந்த அப்டேட் மூலம் சேர்த்துள்ளது. வரவிருக்கும் அட்டேட்டில் இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்கும் என்று தெரிகிறது.

இந்த புதிய சாட் ஃபில்டர் (Chat Filter) அம்சம் வாட்ஸ்அப் பயனர்களுக்கு குரூப் சாட்டிங் செய்பவர்களுக்கு சிறப்பான வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த அம்சம் குரூப் மெசேஜ்களை நிர்வகிப்பதையும் எளிதாக்குகிறது. வாட்ஸ்அப் சாட் பில்டர் அம்சம் இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. ஆனால் இந்த அம்சம் தொடர்பான முக்கியமான மேம்பாடுகள் ஆண்ட்ராய்டுக்கான 2.23.19.7 வெர்ஷனில் காணப்படுகிறது.

ஆப்பிள் விழாவில் புதிய ஐபோன் 15 இன்று வெளியீடு! தரமான மொபைல் தாறுமாறான விலையில்!

WhatsApp may soon allow users to filter group chats: How will it work sgb

இந்த அம்சம் எவ்வாறு செயல்படும் என்பதை விளக்கும் ஸ்கிரீன் ஷாட்கள் பகிரப்பட்டுள்ளன. ஸ்கிரீன்ஷாட்டின் படி, வாட்ஸ்அப் புதிதாக Filter ஆப்ஷன் ஒன்றை சேர்த்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இதன் மூலம் தனிநபர் அரட்டைகளைத் தவிர்த்து குரூப் சாட்களை மட்டும் பார்க்க உதவும்.

தனிநபர் சாட் மற்றும் குரூப் சாட் இடையே ஒரு வேறுபாடு தெரியவேண்டும் என்பதற்காக, தனிநபர் சாட்கள் Contacts என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. அதே நேரத்தில், Business என்ற பில்டர் நீக்கப்பட்டுவிட்டது.

பயனர்கள் தங்கள் வேலை, குடும்பம், நண்பர்கள் மற்றும் பொழுதுபோக்குக்காக பல வாட்ஸ்அப் குரூப்களில் இருப்பார்கள்.  அவற்றை வகைப்படுத்தி குறிப்பிட்ட வகையான சாட்டை மட்டும் விரைவாக பார்க்க பயனர்கள் இந்த வசதியை பயன்படுத்த முடியும். குறிப்பாக, தனிநபர்களுடான உரையாடலையும் குழுக்களில் மேற்கொள்ள உரையாடல்களையும் தனித்துப் பார்க்க இது பயனுள்ள அப்டேட்டாக இருக்கும்.

வெள்ளம் போல சாலைகளில் பாய்ந்து ஓடிய 22 லட்சம் லிட்டர் ரெட் ஒயின்! போர்ச்சுகலில் நடந்தது என்ன?

Follow Us:
Download App:
  • android
  • ios