ஐபோன் 15 சீரிஸில் USB-C சார்ஜிங் வந்தது ஏன்? ஐரோப்பிய யூனியன் போட்ட கறாரான கன்டிஷன் தான் காரணமாம்!
ஆப்பிள் நிறுவனம் 48 மெகாபிக்சல் கேமராவுடன் புதிய ஐபோன் 15 சீரீஸ் மொபைல் போன்கள் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் தனது புதிய ஐபோன் வரிசையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. வழக்கமாக ஐபோன்களில் இருக்கும் லைட்னிங் சார்ஜர் போர்ட் புதிய ஐபோன் 15 மாடல்களில் மாற்றப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த கட்டுப்பாடு தான் என்று கூறப்படுகிறது.
2024 ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பிய யூனியனில் விற்கப்படும் அனைத்து மொபைல் போன்களும் USB-C சார்ஜிங் வசதியுடன் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் கூறியதை அடுத்த ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மொபைல்களுக்கு USB-C போர்ட் வசதியைக் கொடுத்திருக்கிறது.
USB-C சார்ஜர்களை விட தங்கள் லைட்னிங் சார்ஜர் மிகவும் பாதுகாப்பானது என்று ஆப்பிள் நிறுவனம் நீண்ட காலமாக வாதிட்டு வந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் மற்ற சாதனங்களிலும் லைட்னிங் சார்ஜர் தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங் உட்பட பல ஆண்டிராய்டு மொபைல் தயாரிப்பு நிறுவனங்ககளின் மொபைல்களில் USB-C போர்ட் தான் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
அதகளமாக நடந்த ஆப்பிள் வொண்டர்லஸ்ட் நிகழ்வு! புத்தம் புதிய ஐபோன் 15, வாட்ச் சீரீஸ் அறிமுகம்!
"USB-C ஆனது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மாறியுள்ளது. எனவே USB-C ஐ iPhone 15 க்கு கொண்டுவருகிறோம்" என்று ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் டிரான்ஸ் கூறியுள்ளார்.
ஆப்பிள் ஐபோன்களின் விற்பனை குறைந்து வருவதால், பலரும் அதிக விலை உள்ள புதிய மாடல்களுக்கு மாறுவதற்கு யோசிக்கும் நிலையில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் USB-C சார்ஜிவ் வசதி ஐபோன்களுக்கும் வந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலில் சிக்கியுள்ளது. சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு அரசு ஊழியர்கள் ஐபோன்களை பயன்படுத்துவதள்கு தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் புதிய சார்ஜிங் போர்ட்களை விட மற்ற புதிய அம்சங்களைப் பற்றியே முதன்மைப்படுத்தி வருகிறது. ஆனால் USB-C க்கு மாறியது தான் முக்கியமான செய்தி என்று கேஜெட் பிரியர்கள் கூறுகின்றனர்.