அதகளமாக நடந்த ஆப்பிள் வொண்டர்லஸ்ட் நிகழ்வு! புத்தம் புதிய ஐபோன் 15, வாட்ச் சீரீஸ் அறிமுகம்!
ஆப்பிள் வொண்டர்லஸ்ட் வருடாந்திர நிகழ்வில் ஐபோன் 15 மொபைல் போன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் "வொண்டர்லஸ்ட்" வருடாந்திர நிகழ்வில் ஐபோன் 15 சீரீஸ் மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய ஐபோன்கள் விரைவில் விற்பனைக்கு வர உள்ளன. வழக்கம் போல், ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு புதிய ஐபோன் மாடல்கள் வெளியாக உள்ளன.
இந்த ஐபோன்களில் முதல் முறையாக USB-C சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் அதன் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 ஐ வெளியிட்டது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 புதிய S9 செயலியைப் பெற்றுள்ளது. இது வாட்ச் சீரிஸ் 8 ஐ விட 60% வேகமானது என்று ஆப்பிள் கூறுகிறது.
ஐபோன் 15:
ஐபோன் 15 சீரிஸ் மொபைல்களின் வடிவமைப்பு முந்தையை மாடல்களைப் போலவே பாக்ஸ் போன்ற தோற்றத்தில் உள்ளது. பின்புறத்தில் டியூவல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான மாற்றமாக USB Type-C சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன்களை சார்ஜ் செய்ய பிரத்யேகமான ஐபோன் சார்ஜர்களை மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஐபோன் 14 ப்ரோ மாடலில் இருந்த Punch Hole டிஸ்பிளே ஐபோன் 15 சீரிஸின் அனைத்து மாடல்களிலும் உள்ளது. மியூட் சுவிட்ச் பட்டனுக்கு பதில் ஆக்ஷன் சுவிட்ச் பட்டன் இருக்கிறது. இது ஷார்ட்கட்களை எளிதாக பயன்படுத்த உதவுகிறது.
ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் முறையே 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் அளவுகளைக் கொண்டவை. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா இருக்கிறது. இது முந்தைய மாடலில் இருந்த 12 மெகாபிக்சல் டூயல் கேமராவைவிடச் மிகச் சிறந்ததாக இருக்கிறது. இந்தச் கேமராவில் நைட் மோட், ஸ்மார்ட் HDR மோட், போர்ட்ரெய்ட் மோட் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. இதில் 4K வீடியோக்களையும் எடுக்க முடியும். வேகமான ஷட்டர் ஸ்பீடு, மேம்படுத்தப்பட்ட bokeh effects ஆகியவைம் கூடுதல் சிறப்பு அம்சங்கள்.
செல்பி கேமராவில் உள்ள 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, ஹைகுவாலிட்டி செல்ஃபி எடுக்கவும் ஃபேஸ் ஐடி வசதிக்காகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாகும். A16 பயோனிக் பிராசஸர் மூலம் மொபைல் பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் நீடிக்கும். வாய்ஸ் ஐசோலேஷன் (Voice isolation) வசதியும் இந்த மாடல்களில் உள்ளன. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களுக்கு இடையே உள்ள இருக்கும் ஒரே வித்தியாசம் டிஸ்ப்ளேயும் பேட்டரியும் மட்டும்தான் என்று தெரிகிறது.
ஐபோன் 15 ப்ரோ:
ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் கைரேகை சென்சாரில் கறைகள் படிவதைக் குறைக்கும் அம்சம் உள்ளது. டைப்-சி சார்ஜிங் வசதியும் இருக்கிறது. முந்தைய மாடலைப் போலவே ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் OLED திரையையும், ப்ரோ மாடலில் 6.1 இன்ச் திரையையும் இருக்கின்றன. இரண்டு ப்ரோ மாடல் மொபைல்களும் ProMotion தொழில்நுட்பத்துடன் கூடிய Super Retina XDR டிஸ்ப்ளேயைப் பெற்றுள்ளது.
ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் இரண்டிலும் A17 ப்ரோ பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன்களின் செயல்திறன், உயர்தர கணினிகளுக்கு இணையாக இருக்கும் என கூறப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட, உயர் ரக கேமிங் அனுபவத்தைகப் கொடுக்கும் வகையிலும் ப்ரோ மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த மொபைல் போன்கள் பிளாக் டைட்டானியம், ஒயிட் டைட்டானியம், ப்ளூ டைட்டானியம் மற்றும் நேச்சுரல் டைட்டானியம் ஆகிய நான்கு நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளன. ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் உள்ள கேமரா ஏழு கேமரா லென்ஸ்களுக்கு சமமானதாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த ஒளியிலும் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
ஐபோன் 15 சீரிஸ் மொபைல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 17ஆம் தேதியும் விற்பனை செப்டம்பர் 22ஆம் தேதியும் தொடங்கும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது. ஐபோன் 15 இன் ஆரம்ப விலை ரூ.80 ஆயிரம் இருக்கலாம் என்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1.60 லட்சம் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.