டிசம்பர் முதல் வாரத்தில் விவோ எக்ஸ்300 சீரிஸ் மற்றும் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஆகிய இரண்டு முக்கிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன.
டிசம்பர் மாதம் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு மிகச் சிறப்பாக இருக்கும் என்றே கூறலாம். இந்த வாரம் இந்தியாவில் இரண்டு முன்னணி ஸ்மார்ட்போன் சீரிஸ்கள் அறிமுகமாக உள்ளன. விவோ எக்ஸ்300 (Vivo X300) சீரிஸ் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாவதுடன், ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4X 5G) ஸ்மார்ட்போனும் டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகிறது. இரு நிறுவனங்களும் தங்கள் ஃப்ளாக்ஷிப் வரிசைகளில் பெரிய மாற்றங்களையும் புதிய தொழில்நுட்பங்களையும் கொண்டு வருவதால், மொபைல் சந்தையில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
விவோ எக்ஸ்300
Vivo X300 சீரிஸ் முதலில் டிசம்பர் 2 அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த தொடரில் Vivo X300 Pro மற்றும் Vivo X300 ஆகிய இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. 3nm MediaTek Dimensity 9500 SoC, V3+ இமேஜிங் சிப், Pro Imaging VS1 சிப் போன்ற உயர்தர செயல்திறன் அம்சங்களுடன் இந்த சீரிஸ் வருகிறது. Android 16 அடிப்படையிலான Origin OS-இல் இயக்கப்படும் இந்த மாடல்களில், குறிப்பாக Vivo X300 Pro மாடலில் Zeiss கூட்டாக ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. இதில் 50MP Sony LWT-828 முதன்மை சென்சார், 50MP Samsung JN1 அல்ட்ராவைடு கேமரா மற்றும் 200MP HPB டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.
ரியல்மி பி4எக்ஸ் 5ஜி
Realme P4X 5G ஸ்மார்ட்போன் டிசம்பர் 4-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகிறது. MediaTek Dimensity 9400 Ultra 5G சிப் செட்டுடன் வரும் இந்த மாடல், மிகப்பெரிய 7000 mAh டைட்டன் பேட்டரியுடன் 45W வயர்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கிறது. அதிக வெப்பத்தை கட்டுப்படுத்த 5,300 சதுர மிமீ பெரிய வெக்கூம் கூலிங் சேம்பர் இருக்கும். மேலும் 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட கண்ணை கவரும் டிஸ்ப்ளே வழங்கப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ விவரங்கள் அறிமுக நாளில் வெளியாகும்.
டிசம்பர் மொபைல் லாஞ்ச்
Vivo X300 சீரிஸ் மற்றும் Realme P4X 5G வெளியீடுகள் ஆண்டின் இறுதியில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை மீண்டும் சூடுபடுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். செயல்திறன், கேமரா திறன் மற்றும் பேட்டரி சக்தியில் இரு மாடல்களும் பெரிய போட்டியை உருவாக்க உள்ளன. புதிய ஃபீச்சர்களை எதிர்நோக்கும் பயனர்களுக்கு இது ஒரு விருந்தாக இருக்கும் என்று கூறலாம்.


