பட்ஜெட் கொஞ்சம் அதிகம் தான்.. ஆனால் தரமான போன்.. அறிமுகமான Vivo V40 SE - உத்தேச விலை மற்றும் ஸ்பெக் இதோ!

Vivo V40 SE : நேற்று மார்ச் 27ம் தேதி விவோ நிறுவனத்தின் புதிய Vivo V40 SE செல் போன் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இந்த செல் போன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo introduces mid range smart phone vivo v40 se see full Specifications and expected price ans

Vivo V40 SE 5G குவால்காமின் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 சிப்செட், வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5,000எம்ஏஎச் பேட்டரி, டிரிபிள் ரியர் கேமரா யூனிட் மற்றும் முழு-எச்டி+ AMOLED டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெரும் என்று அதிகாரபூர்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 8ஜிபி RAM மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகமாகவுள்ளது. 

ஆனால் இந்த 8GB + 256 GB வகையை தவிர வேறு மறுபாட்டில் இந்த போன் கிடைக்குமா? என்பதை குறித்து எந்த தகவலையும் விவோ நிறுவனம் வெளியிடவில்லை. ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால், சுமார் 16 மணிநேரத்திற்கும் அதிகமான YouTube ஸ்ட்ரீமிங் நேரத்தை விவோ-வின் இந்த கைபேசி வழங்குவதாகக் கூறப்படுகிறது.

உங்க இதயத் துடிப்பு உங்களுக்கே கேட்கும்.. கண்முன்னே அமானுஷ்யம் நடக்கும் - உலகின் Silent Room பற்றி தெரியுமா?

Vivo V40 SE 5G இரண்டு வண்ண விருப்பங்களில் ஆன்லைனில் பட்டியலிடப்பட்டுள்ளது - கிரிஸ்டல் பிளாக் மற்றும் லெதர் பர்பில். Vivoவின் EU இணையதளத்திலும் Vivo Austria தளத்திலும் இதைக் காணலாம். மாடலின் விலை மற்றும் விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் விரைவில் இந்த போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo V40 SE 5Gயின் மூன்று பின்புற கேமராவில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் இணைக்கப்பட்ட 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் யூனிட்டுடன் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவை அடங்கும். முன் கேமரா, திரையின் மேற்புறத்தில் மையப்படுத்தப்பட்ட துளை-பஞ்ச் ஸ்லாட்டில் வைக்கப்பட்டுள்ளது, 16-மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இதன் விலை சுமார் 30,000 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பேமெண்ட் ஆப்ஷனுடன் அசத்தும் வாட்ஸ்அப்! வெளிநாட்டுக்கும் ஈசியா பணம் அனுப்பலாம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios