Nothing Headphone மார்ச் 5-ல் வெளியாகும் நத்திங் ஹெட்போன் ஏ! புதிய ட்ரான்ஸ்பரன்ட் டிசைன், ANC மற்றும் கம்மி விலையில் மிரட்டலான அம்சங்கள். முழு விவரங்கள் உள்ளே.

ஸ்மார்ட்போன் மற்றும் கேஜெட் (Gadget) சந்தையில் தனது தனித்துவமான ட்ரான்ஸ்பரன்ட் (Transparent) டிசைன் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நத்திங் நிறுவனம், மீண்டும் ஒரு பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் 5 ஆம் தேதி உலகளாவிய சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் Nothing Phone 4a சீரிஸுடன் இணைந்து புதிய 'Nothing Headphone (a)' மாடலையும் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய நேரப்படி மாலை 4:00 மணிக்கு நடைபெறும் இந்த பிரம்மாண்ட வெளியீட்டு நிகழ்வில், இந்தியாவும் முதல் கட்ட வெளியீட்டுப் பட்டியலில் (First wave) இடம்பெற்றுள்ளது என்பது இந்திய ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

கவனத்தை ஈர்க்கும் டிசைன் மற்றும் புதிய கலர்கள்

நத்திங் பிராண்ட் என்றாலே அதன் ட்ரான்ஸ்பரன்ட் டிசைன் தான் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும். அந்த வகையில் இந்த புதிய Headphone (a) மாடலிலும் நத்திங்கின் சிக்னேச்சர் டிசைன் தொடர்கிறது. சமீபத்தில் வெளியான டீஸர் புகைப்படங்களில், இந்த ஓவர்-இயர் (Over-ear) ஹெட்போன் பிரகாசமான மஞ்சள் (Yellow) நிறத்தில் காட்சியளிக்கிறது.

மேலும், மெட்டாலிக் கிரே நிறத்திலான விளிம்புகள், டாட்-மேட்ரிக்ஸ் (Dot-matrix) எழுத்துருவில் நத்திங் லோகோ என இதன் டிசைன் மிகவும் ட்ரெண்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கசிந்த தகவல்களின்படி, இந்த ஹெட்போன் கருப்பு, வெள்ளை, பிங்க் மற்றும் மஞ்சள் என நான்கு கவர்ச்சிகரமான நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

நத்திங் நிறுவனம் இதன் முழுமையான சிறப்பம்சங்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், முந்தைய மாடலான நத்திங் ஹெட்போன் 1-ஐ ஒப்பிடும்போது இது பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC), சிறப்பான ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் இதில் இடம்பெறலாம்.

இதன் முந்தைய மாடலில் 40mm டிரைவர்கள், 42dB வரையிலான நாய்ஸ் கேன்சலேஷன், Bluetooth 5.3 மற்றும் ANC இல்லாமல் 80 மணி நேர பேட்டரி லைஃப் ஆகியவை வழங்கப்பட்டிருந்தது. அதே தரத்திலோ அல்லது அதைவிட மேம்பட்ட தொழில்நுட்பத்திலோ இந்த புதிய Headphone (a) மாடலும் வெளிவரும் என டெக் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

பட்ஜெட் விலையில் நத்திங் ஹெட்போன்?

சென்ற ஆண்டு வெளியான நத்திங் ஹெட்போன் 1, இந்தியாவில் சுமார் ரூ. 21,990 என்ற விலையில் விற்பனைக்கு வந்தது. ஆனால், இந்த புதிய Headphone (a) மாடல் ஒரு பட்ஜெட் ஃபிரண்ட்லி (Budget-friendly) தயாரிப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய சந்தைகளில் இதன் விலை தோராயமாக EUR 159 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 17,300) ஆக இருக்கும் என கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் முந்தைய மாடலை விட மிகக் குறைவான விலையில் ஒரு பிரீமியம் ஹெட்போன் அனுபவத்தை நத்திங் வழங்கவுள்ளது. மார்ச் 5-ல் நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழ்வில் இதன் இந்திய விலை மற்றும் முழுமையான அம்சங்கள் தெரியவரும்.