சர்வதேச பெமெண்ட் அம்சம் தற்போது சோதனை நிலையில் உள்ளது. பொது பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. இது எதிர்காலத்தில் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் செயலியில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிகணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்நிறுவனம் தற்போது இந்தியாவுக்குள் பணம் அனுப்புதல் வசதியை அளித்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் வசதியை உருவாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்ப்படும் யுபிஐ (UPI) முறையில் இந்திய பயனர்கள் சர்வதேச பேமெண்ட்களை தடையின்றி மேற்கொள்ள உதவும் புதிய அம்சம் தொடர்பாக வாட்ஸ்அப் முயற்சி எடுத்து வருகிறது எனக் கூறப்படுகிறது. "இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ்" என அழைக்கப்படும் இந்த அம்சம் குறித்து சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

Mood of the Nation Survey 2024: ஏசியாநெட் நியூஸ் மூட் ஆஃப் த நேஷன் சர்வே முடிவுகள்! மக்கள் ஆதரவு யார் பக்கம்?

Scroll to load tweet…

இந்த அம்சம் இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள், அவர்களின் வங்கிகள் சர்வதேச UPI சேவையை செயல்படுத்தியிருந்தால் மட்டும் பயன்படுத்த முடியும். அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச வணிகர்களுக்கு மட்டும் நேரடியாக பேமெண்ட் செய்ய இந்த புதிய வசதி அனுமதிக்கிறது. இதன் மூலம் நிதி பரிவர்த்தனைகளை சீராக்கலாம் என்றும் சிக்கலான வங்கி செயல்முறைகளைத் தவிர்க்கலாம் என்றும் வாட்ஸ்அப் கருதுகிறது.

சர்வதேச பெமெண்ட் வசதி கிடைக்க பயனர்கள் குறிப்பிட்ட கால அளவைத் தேர்வு செய்ய வேண்டும். வாட்ஸ்அப் பயனர்கள் இந்த காலத்தை மூன்று மாதங்கள் வரை நீட்டிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பெமெண்ட் அம்சம் தற்போது சோதனை நிலையில் உள்ளது. பொது பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. இது எதிர்காலத்தில் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்!