Asianet News TamilAsianet News Tamil

Mood of the Nation Survey 2024: ஏசியாநெட் நியூஸ் மூட் ஆஃப் த நேஷன் சர்வே முடிவுகள்! மக்கள் ஆதரவு யார் பக்கம்?

ஏசியாநெட் நியூஸ் மூட் ஆஃப் நேஷன் சர்வே, 2024, மக்களவைத் தேர்தல் களம் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருப்பதையும், காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலில் இருப்பதையும் காட்டுகிறது.  ஏசியாநெட் நியூஸ் மூட் ஆஃப் நேஷன் சர்வே, 2024, மக்களவைத் தேர்தலுக்கான சர்வே நடத்தி இருந்தது. இதில் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வாக்களித்து இருந்தனர். அதன் முடிவுகளை இங்கே உங்களுடன் பகிர்கிறோம்.

Lok Sabha Election 2024: Asianet News Mood of the Nation Survey Results sgb
Author
First Published Mar 27, 2024, 6:04 PM IST

வரவிருக்கும் மக்களவை தேர்தல் பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமின்றி, அதைவிட எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு முக்கியமாக சோதனையாக அமைகிறது. பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி களமிறங்குகிறது.

ஏஷியாநெட் நியூஸ் நெட்வொர்க்கால் ஆன்லைனில் நடத்தப்பட்ட மெகா மூட் ஆஃப் தி நேஷன் சர்வே (Mood of the Nation Survey), எதிர்கட்சிகளின் கூட்டணி கடுமையான போட்டிக்குத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது. பல வழிகளில், இந்த பொதுத் தேர்தல் நாட்டை ஒரு புதிய வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லக்கூடும் என்றும் இந்த சர்வே காட்டுகிறது.

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் டிஜிட்டல் தளங்களில் ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, பங்களா மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் மார்ச் 13 மற்றும் மார்ச் 27 வரை நடத்திய விரிவான கருத்துக்கணிப்பில் 7,59,340 பேரின் பதில்கள் பெறப்பட்டன.

பன்முகத்தன்மை வாய்ந்த தேசத்தின் மூலை முடுக்குகளிலும் விவாதிக்கப்படும் தலைப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில், கணக்கெடுப்புக்கான கேள்விகள் கவனமாகத் தொகுக்கப்பட்டன. 'ஒவ்வொரு வாக்கையும் கணக்கிட வேண்டும், ஒவ்வொரு கருத்தும் முக்கியமானது' என்ற உறுதியுடன் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

இலவசங்கள் தேவையா? மக்களின் மனது மாறுகிறதா? ஆச்சரியம் அளிக்கும் ஏசியாநெட் நியூஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள்!!

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மூட் ஆஃப் தி நேஷன் சர்வே குறித்த விவரங்களை விவாக ஆராயலாம்.

* குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் நரேந்திர மோடி அரசின் முடிவு தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என 51.1 சதவீதம் பேர் நம்புகின்றனர். ஆனால் 26.85 சதவீதம் பேர் சிஏஏ குறித்த முடிவு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிர்மறையான முடிவையே கொடுக்கும் என்று நம்புகின்றனர். 22.03 சதவீதம் பேர் சிசிஏ சட்டம் அமல்படுத்தப்பட்டதால் பாஜகவுக்கு தேர்தலில் எந்த பயனும் கிடைக்காது என்றும் கருதுகின்றனர். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 48.4 சதவீதம் பேர், சிஏஏ விதிகளை அறிவிக்கும் முடிவு பாஜகவுக்கு தேர்தலில் எந்த பலனையும் கொடுக்காது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

* நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய சாதனை எது என்று கேட்டபோது, 38.11 சதவீதம் பேர், இந்த அரசு மேற்கொண்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டியுள்ளனர். 26.41 சதவீதம் பேர் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைத் தேர்வு செய்துள்ளனர். 11.46 சதவீதம் பேர் 'ஆத்மநிர்பர் பாரத்' (சுயசார்பு இந்தியா) திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து கருத்து கூறியவர்களில் 30.04 சதவீதம் பேர் ராமர் கோவில் கட்டியது தான் மோடி அரசின் மிகப்பெரிய சாதனை என்று கூறியுள்ளனர். தெலுங்கு பேசும் மக்களில் 30.83 சதவீதம் பேரும் இதேபோன்ற ஒரு பார்வையை வெளிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில், டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கும் சிறப்பான ஆதரவு கொடுத்துள்ளனர்.

Lok Sabha Election 2024: Asianet News Mood of the Nation Survey Results sgb

* ஒட்டுமொத்தமாக கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 57.16 சதவீதம் பேர் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் ராமர் கோயில் ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்று கூறியுள்ளனர், 31.16 சதவீதம் பேர் அதற்கு மாறான கருத்தைக் கொண்டுள்ளனர்.

* பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் யார் என்ற கேள்வியில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக 51.06 சதவீதம் பேரும், ராகுல் காந்திக்கு ஆதரவாக 46.45 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். கேரளாவில் மட்டும் ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என 50.59 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். இதைத் தவிர, நரேந்திர மோடி 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆதரவும் தேசியத் தலைவராக உருவெடுத்து வருவதைக் காணலாம். கேரளா தவிர மற்ற தென் மாநிலங்களிலும் பிரதமர் பதவிக்கு மோடியே முதன்மையான தேர்வாக இருக்கிறார்.

* மூட் ஆஃப் தி நேஷன் கணக்கெடுப்பில் இருந்து வெளிவந்த மிக முக்கியமான தகவல், வாக்காளர்கள் தங்களுக்கு எது முக்கியம் என்று கூறியிருப்பதுதான் என்று சொல்லலாம். இலவசங்கள் மற்றும் ஜனரஞ்சக வாக்குறுதிகளுக்கு அளிக்கும் வரவேற்பு குறைந்துள்ளதைக் காணமுடிகிறது. பதிலளித்தவர்களில் 80.5 சதவீதம் பேர் வளர்ச்சி என்பதையே முக்கியமானதாகக் கருதுகின்றனர். சாதி, வேட்பாளர் அல்லது இலவசங்களைவிட நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதே வாக்கைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இது வாக்காளர்களின் கருத்து மாறி வருவதைப் பிரதிபலிக்கிறது. எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் வியூகத்தை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

* பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ளவர்கள்கூட 60.33 சதவீதம் பேர் 2024 மக்களவை தேர்தலில் மோடி அலையை இந்தியா கூட்டணியால் வெல்ல முடியாது என்று சொல்கிறார்கள். பதிலளித்தவர்களில் 32.28 சதவீதம் பேர் மட்டுமே இந்தியா கூட்டணியால் மோடி அலையை வீழ்த்த முடியும் என்று நம்புகின்றனர். இதை இன்னும் உன்னிப்பாகப் பார்ப்பதற்கான அம்சம் ஒன்றும் உள்ளது. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 48.24 சதவீதம் பேர், தொலைக்நோக்கு இல்லாதது, தலைமை இல்லாதது மற்றும் பிரதமர் பதவிக்கான ஆசையில் பல தலைவர்கள் இருப்பது ஆகியவை எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதாகச் சொல்கின்றனர்.

Lok Sabha Election 2024: Asianet News Mood of the Nation Survey Results sgb

* காங்கிரஸுக்கு கவலையளிக்கும் அம்சங்களும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளன. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்பை மேம்படுத்தாது என 54.76 சதவீதம் பேர் கருதுகிறார்கள். வெறும் 38.12 சதவீதம் பேர் மட்டுமே ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையால் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என நம்பிகின்றனர்.

* மோடி அரசின் மிகப்பெரிய தோல்வி என்று எது என்று கேட்டபோது, 32.86 சதவீதம் பேர் மணிப்பூர் விவகாரத்தை மோடி அரசு சரியாகக் கையாளவில்லை, வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது என்று கடுமையாக சாடியுள்ளனர். இந்தக் கேள்விக்கான பதிலில் எரிபொருள் விலை உயர்வு (26.2 சதவீதம்), வேலைவாய்ப்பின்மை (21.3 சதவீதம்) மற்றும் விலைவாசி உயர்வு (19.6 சதவீதம்) ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 41.79 சதவீதம் பேர் விலைவாசி உயர்வுதான் மோடி அரசின் மோசமான தோல்வி எனக் கூறியுள்ளனர். இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து பதிலளித்தவர்களுக்கு வேலைவாய்ப்பின்மை (36.7 சதவீதம்) மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதை இந்த சர்வே காட்டுகிறது.

* மூட் ஆஃப் தி நேஷன் சர்வேயில் இருந்து தெரியவரும் மற்றொரு முக்கிய அம்சம் இது. 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வடக்கு - தெற்கு பிரிவினையை உருவாக்க திட்டமிட்டு முயற்சி நடப்பதாக 51.36 சதவீதம் பேர் நம்புகிறார்கள். 35.28 சதவீதம் பேர் இதில் இருந்து முரண்படுகிறார்கள்.

Lok Sabha Election 2024: Asianet News Mood of the Nation Survey Results sgb

* நடுத்தர வர்க்கம் இந்த நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. மோடி அரசின் ஆட்சியில் நடுத்தர மக்களின் வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது என 47.8% பேர் கருகின்றனர். 46.1% பேர் இதற்கு மாறாக நினைக்கின்றனர். இந்த பதில்கள் எதிர்க்கட்சிகளுக்கும் ஆளும் மோடி அரசுக்கும் முக்கியமான செய்தியை வழங்குவதாக உள்ளன.

* சர்வேயில் பதிலளித்தவர்களில் மொத்தம் 51.07 சதவீதம் பேர் மோடி அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக நம்புகிறார்கள். 42.97 சதவீதம் பேர் மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என நினைக்கிறார்கள். அதே சமயம், மோடி ஆட்சியில் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக 60.4 சதவீதம் பேர் நம்பியுள்ளனர். 56.39 சதவீதம் பேர் மோடி அரசு வெளியுறவுக் கொள்கையைக் கையாண்ட விதத்தையும் பாராட்டியுள்ளனர். 65.08 சதவீதம் பேர் சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் மோடி அரசின் செயல்பாடுகளை ஆதரித்துள்ளனர். 21.82 சதவீதம் பேர் சீன எல்லைப் பிரிச்சினையை மோடி அரசு சரியாகக் கையாளவில்லை என என்கிறார்கள். 79.27 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் கீழ் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு மேம்பட்டிருப்பதாகக் நம்புகின்றனர்.

* அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்தியாவை ஆளுவதற்கு மிகவும் பொருத்தமானது யார் என்று கேட்டபோது, 78.6 சதவீதம் பேர் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தேர்வு செய்துள்ளனர். 21.4 சதவீதம் பேர் இந்தியா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Lok Sabha Election 2024: மோடி அரசின் 10 ஆண்டுகால சாதனைகள் என்னென்ன? 'மூட் ஆஃப் தி நேஷன்' சர்வே முடிவுகள்!!

Follow Us:
Download App:
  • android
  • ios