இலவசங்கள் தேவையா? மக்களின் மனது மாறுகிறதா? ஆச்சரியம் அளிக்கும் ஏசியாநெட் நியூஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள்!!

இலவசங்கள் மற்றும் ஜனரஞ்சக வாக்குறுதிகளுக்கு அளிக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்து வருதை கருத்துக்கணிப்பு முடிவுகள் பிரதிபலிக்கின்றன. சர்வேயில் பதில் அளித்தவர்களில் 80.5 சதவீதம் பேர் வளர்ச்சி திட்டங்களையே முக்கியமானதாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளனர்.

Are people changing their opinion about freebies? Surprising Asianet News Poll Results! sgb

ஏசியாநெட் நியூஸ் நடத்திய மூட் ஆஃப் தி நேஷன் சர்வே என்ற மெகா கருத்துக்கணிப்பில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்கள் மீதான மக்களின் மனநிலை என்ன என்பது தெரியவந்துள்ளது. தேர்தலில் ஓட்டு போடும்போது வாக்காளர்கள் எதை முக்கியமாகக் கருதுகிறார்கள் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

இலவசங்கள் மற்றும் ஜனரஞ்சக வாக்குறுதிகளுக்கு அளிக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்து வருதை கருத்துக்கணிப்பு முடிவுகள் பிரதிபலிக்கின்றன. சர்வேயில் பதில் அளித்தவர்களில் 80.5 சதவீதம் பேர் வளர்ச்சி திட்டங்களையே முக்கியமானதாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளனர்.

சாதி ஆதாரவு மனப்பான்மை, வேட்பாளரின் பின்னணி அல்லது இலவசங்களை விட வளர்ச்சித் திட்டப் பணிகள் என்னென்ன என்பதைப் பார்த்தே வாக்கு செலுத்துவதாகக் கூறியுள்ளனர்.

இது நாட்டில் வாக்களிக்கும் மக்களின் கருத்து மாறி வருவதைப் என்பதைக் காட்டுவதாக உள்ளது. அரசியல் கட்சிகள் மக்கள் மனநிலையை உணர்ந்து தேர்தல் வியூகத்தை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துவதாக உள்ளது.

Lok Sabha Election 2024: மோடி அரசின் 10 ஆண்டுகால சாதனைகள் என்னென்ன? 'மூட் ஆஃப் தி நேஷன்' சர்வே முடிவுகள்!!

Are people changing their opinion about freebies? Surprising Asianet News Poll Results! sgb

அதே நேரத்தில், கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 57.16 சதவீதம் பேர் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது முக்கியாமன தாக்கம் செலுத்தும் என்று கூறியுள்ளனர். 31.16 சதவீதம் பேர் அதற்கு மாறான கருத்தைக் கொண்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் பக்கம் உள்ள முக்கியமான பலவீனங்கள் என்னென்ன என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளன. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 48.24 சதவீதம் பேர், தொலைக்நோக்கு இல்லாதது, தலைமை இல்லாதது மற்றும் பிரதமர் பதவிக்கான ஆசையில் பல தலைவர்கள் இருப்பது ஆகியவை எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதாகச் சொல்கின்றனர்.

ஏஷியாநெட் நியூஸ் நெட்வொர்க் ஆன்லைனில் நடந்திய மூட் ஆஃப் தி நேஷன் சர்வே (Mood of the Nation Survey) மூலம் 7,59,340 பேர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் டிஜிட்டல் தளங்களில் ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, பங்களா மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் மார்ச் 13 முதல் மார்ச் 27 வரை இந்தக் கருத்துக்கணிப்புக்கான பதில்கள் பெறப்பட்டன.

Mood of the Nation Survey 2024: ஏசியாநெட் நியூஸ் மூட் ஆஃப் த நேஷன் சர்வே முடிவுகள்! மக்கள் ஆதரவு யார் பக்கம்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios