இந்த அப்டேட் எப்படி இருக்கு? Twitter-ல் இனி யாரும் உங்களை டேக் செய்ய முடியாது

டுவிட்டரில் யாரும் உங்களை டேக் செய் முடியாதபடி புதிய பிரைவசி அம்சம் கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

Twitter platform is working on an official dont at me privacy feature

ஜேன் மன்ஞ்சுன் வாங் என்ற ஆப் டெவலப்பர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சோதனை முயற்சியாக டுவிட்டரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர், டுவிட்டரின் தளத்தில் பயனர்களுக்கு அவர்களை டேக் செய்யாத வண்ணம் ஒரு வசதி இருந்தால் எப்படி இருக்கும் என சோதனை செய்து வெளியிட்டார். 

 

 

இந்த அம்சமானது ஏற்கெனவே டுவிட்டரில் சோதனை செய்து வருவதாக டுவிட்டரின் அதிகாரப்பூர்வ டிசைனர் உறுதிசெய்துள்ளார். இதனால், கூடிய விரைவில் Dont @ me என்ற, டேக் செய்வதை தடுத்தல் அம்சம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இனி ரூ.10,000க்கு மேல் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் கண்டிப்பாக 5ஜி இருக்கனும்.. மத்திய அரசு அட்வைஸ்

முன்னதாக ஆப் டெவலப்பர் வாங் வெளியிட்ட ஸ்கிரீன்ஷாட்டில், டேக் பாதுகாப்பு அம்சம் எப்படி இருக்கும் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அதன்படி, டுவிட்டரில் Mention என்ற பகுதியில் ‘மற்றவர்கள் உங்கள் டேக் செய்வதற்கான அனுமதி’ என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. அதை டிக் செய்தால் போதும். டுவிட்டரில் உங்களை யாரும் டேக் செய்ய முடியாது. 

Jio ரீசார்ஜ் ஆஃபரில் இருந்து Hotstar நீக்கம்! பயனர்கள் அதிர்ச்சி!!

தற்போதைக்கு டுவிட்டரில் ஃபாலோ செய்பவர்ளை முடக்கவும், ஃபோலோவர்ஸின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்குமான வசதி கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios