போன் நம்பர் வேண்டாம்.. ஆடியோ கால் வீடியோ கால் பேசிக்கலாம்.. Xல் புகுத்தப்படும் புதுமை - எலான் மஸ்க் அறிவிப்பு!
தற்போது X என்று அழைக்கப்படும் ட்விட்டர் நிறுவனத்தை, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் வாங்கினார். சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அவர் அதை வாங்கினார் என்று கூறப்படுகிறது. அன்று துவங்கி இன்று வரை பெயர் உள்ளிட்ட பல மாற்றங்களை பெற்று வருகின்றது ட்விட்டர்.
சில காலம் ட்விட்டர் பக்கத்தின் லோகோவாக அந்த பறவைக்கு பதிலாக கிரிப்டோ கரன்சி dodgecoinன் லோகோவை வைத்திருந்த எலான், தற்போது முழுமையாக ட்விட்டரின் பெயரை X என்று மாற்றி அதகளம் செய்து வருகின்றார். இந்நிலையில் X தலத்தில் அறிமுகமாகவுள்ள சில புதிய வசதிகள் குருத்து தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் எலான்.
ஸ்டீவ் ஜாப்ஸ் கையால் எழுதப்பட்ட விளம்பர கடிதம் ரூ.1.4 கோடிக்கு ஏலம்!
ஏற்கனவே லைவ் ஸ்ட்ரீம் வசதிகள் ட்விட்டர் பக்கத்தில் இணைக்கப்படும் என்று அறிவித்திருந்த இலான் எலான் மஸ்க், தற்பொழுது போன் நம்பரை பயன்படுத்தாமலேயே ட்விட்டர் தளத்தை பயன்படுத்தி (தற்போது X என்று அழைக்கப்படுகிறது) ஆடியோ மற்றும் வீடியோ கால்களை பேசிக்கொள்ள புதிய வழிவகைகள் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த வசதியை iOS, ஆண்ட்ராய்டு, Mac மற்றும் பர்சனல் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் அனைவராலும் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இனி ட்விட்டர் (X) தான் குளோபல் அட்ரஸ் புக் என்றும் தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.