Twitter-ல் இருந்து மொத்தமாக ராஜினாமா செய்யும் பணியாளர்கள்! Elon Musk பதில்..
எலான் மஸ்க்கின் கிடுக்குபிடியால் டுவிட்டர் பணியாளர்கள் மொத்தமாக ராஜினாமா செய்து வருகின்றனர். பணியாளர்களின் இந்த ராஜினாமா போராட்டத்துக்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.
எலான் மஸ்க் டுவிட்டரை கைப்பற்றிய பிறகு பல அதிரடியான மாற்றங்கள் நடந்து வருகின்றன. டுவிட்டரை வாங்கும் போது அனைவருக்கும் கருத்துச்சுதந்திரம் எலான் மஸ்க் கூறியிருந்தார். ஆனால், அவருடைய நிறுவனத்திலேயே பணியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
உடனுக்குடன் மாற்றங்களை எதிர்பார்க்கும் எலான் மஸ்க், அந்த மாற்றங்களுக்கான திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்து வருகிறார். மேலும், கடுமையாக உழைக்கவில்லை எனில் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். இதனால் டுவிட்டர் பணியாளர்கள் இரவு பகலாக உழைக்கத்தொடங்கினர். இருப்பினும் எலான் மஸ்கின் வேகத்திற்கு பணியாளர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இந்த நிலையில், டுவிட்டர் பணியாளர்கள் பலரும் மொத்தமாக ராஜினாமா செய்யத் தொடங்கியுள்ளனர். டுவிட்டரில் #RIPTwitter #TwitterDown #GoodByeTwitter போன்ற ஹேஸ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகின்றன. ஒவ்வொரு கேஷ்டேக்கிலும் பணியாளர்கள் டுவிட்டரில் சமீபகாமலாக தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை குறிப்பிட்டு மீம்ஸ் பதிவிடுகின்றனர்.
#GoodByeTwitter மற்றும் #RIPTwitter அதிகமாக டிரெண்ட் ஆனதை அடுத்து, எலான் மஸ்க் அதற்கும் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய டுவிட்டர் பக்கத்தில், மேற்கண்ட ஹேஷ்டேக் பதிவுகளை ரீடுவிட் செய்துள்ளார். அதில் அவர் ‘இதற்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எலான் மஸ்க் பணி நீக்கம் செய்த பணியாளர்கள், ராஜினாமா செய்த பணியாளர்கள் அனைவரும் டுவிட்டர் அலுவலகத்தை தாக்குவதற்கு முயற்சிக்கலாம் என்று தகவல்கள் வந்தன. இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த பணியாளர்கள் பணிபுரிந்த டுவிட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
முன்னதாக, பயனர்கள் அனைவருக்கும் கட்டண அடிப்படையில் ப்ளூ டிக் வழங்கப்பட்டது. ஆனால், சில போலி கணக்குகள், பெருநிறுவனங்கள், பிரபலங்களின் பெயரில் ப்ளூ டிக் வாங்கி விட்டன. அதோடு, பெருநிறுவனங்களின் பெயரில் போலியான டுவீட்களும் செய்தனர். இதனால் டுவிட்டரின் பங்குகள் குறைந்தது.
Facebook Meta இந்தியாவின் புதிய தலைவராக சந்தியா தேவநாதன் தேர்வு! யார் இவர்?
டுவிட்டரைப் போல் அமேசான், கூகுள், மெட்டா ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட பெருநிறுவனங்களிலும் பணிநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அமேசானில் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, ஆட்சேர்ப்பு பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.