Facebook Meta இந்தியாவின் புதிய தலைவராக சந்தியா தேவநாதன் தேர்வு! யார் இவர்?
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் தற்போது இந்திய வணிகத்தின் பிரிவில் புதிய தலைவராக சந்தியா தேவநாதனை நியமிக்கப்பட்டுள்ளார். இவரைப் பற்றி நீக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான 5 விஷயங்களை இங்குக் காணலாம்.
டுவிட்டர், ஃபேஸ்புக் என பெருநிறுவனங்களில் கடந்த இரண்டு மாதங்களாக பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவிலும் தற்போது தலைவர்கள் நீக்கப்பட்டு, புதிய தலைவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
. அந்தவகையில், மெட்டா நிறுவனத்தின் இந்திய வணிக பிரிவுக்கு புதிய தலைவராக சந்தியா தேவநாதனை நியமிக்கப்பட்டுள்ளார். சந்தியா தேவநாதன் உலகளாவிய பணியில் 22 வருட அனுபவம் மிக்கவர். வங்கியியல், பேமெண்டுகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் சர்வதேச கேரியரை கொண்டவர். சந்தியாவின் சுயவிவரங்கள் அவருடைய LinkedIn பக்கத்தில் உள்ளன. அதன்படி, சந்தியா 2000 ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் மேலாண்மைக் கல்வி துறையில் MBA முடித்தார் .
கடந்த 2016 இல் மெட்டாவில் சேர்ந்தார். சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் வணிகம், அதன் குழுக்களுடன் இணைந்து மெட்டாவின் வளர்ச்சிக்கு உதவினார். அத்துடன் தென்கிழக்கு ஆசியாவில் தொழில்நுட்ப நிறுவனமான ஈ-காமர்ஸ் முயற்சிகளை உருவாக்க உதவினார். அவரது புதிய பதவியின்படி, மெட்டா ஆசியா-பசிபிக் துணைத் தலைவர் டான் நியருக்கு கீழ் சந்தியா தேவநாதன் பணிபுரிவார் என்று கூறப்படுகிறது.
2020 ஆம் ஆண்டில், உலகளவில் மெட்டாவிற்கான மிகப்பெரிய வெர்டிக்கலல் ஒன்றான ஆசிய-பசிபிக் (APAC) பிராந்தியத்தில் மெட்டாவின் கேமிங் முயற்சிகளை சந்தியா தேவநாதன் வழிநடத்தினார்.சந்தியா தேவநாதனின் LinkedIn சுயவிவரத்தின்படி, தலைமைத்துவம் மிக்க வழக்கறிஞராகவும், பணியிடத்தில் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பாராகவும் உள்ளார்.
ஸ்மார்ட் கேட்ஜெட்டுகள் உற்பத்தியில் பின்வாங்கிய மெட்டா நிறுவனம்!
சந்தியா தேவநாதனின் நியமனம் குறித்து மெட்டாவின் முதன்மை வணிக அதிகாரி மரேன் லீவின் வாழ்த்துச் செய்தியை சுற்றறிக்கையாக அறிவித்துள்ளார். அதன்படி, சந்தியா சீரான வணிக வளர்ச்சிக்கு பெரும் அர்பணிப்பு அளித்தவர். ஆக்கப்பூர்வமா குழுக்கழுடன் இணைந்து பணியாற்றுதல், தயாரிப்புகளில் புதுமைகளை கொண்டு வருதல், வலுவான பார்ட்னர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் நிரூபிக்கப்பட்ட சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் மெட்டாவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு அவர் தலைமை தாங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ இவ்வாறு மரேன் லீவின் தெரிவித்துள்ளார்.
மெட்டாவின் வணிகத்தின் நீண்டகால வளர்ச்சி மற்றும் இந்தியாவிற்கான அர்ப்பணிப்புக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அதே வேளையில், அதன் கூட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சேவை செய்வதற்காக, நிறுவனத்தின் வணிகம் மற்றும் வருவாய் முன்னுரிமைகளை ஒன்றாகக் கொண்டுவருவதில் தேவநாதன் கவனம் செலுத்துவார் என்று நம்புவதாகவும்’ மெட்டா பாராட்டியுள்ளது.