Asianet News TamilAsianet News Tamil

ஸ்மார்ட் கேட்ஜெட்டுகள் உற்பத்தியில் பின்வாங்கிய மெட்டா நிறுவனம்!

மெட்டா நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கேட்ஜெட்களை அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த தயாரிப்பு பணிகளை அப்படியே நிறுத்திவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. 

Meta to discontinue Portal products and Smartwatches, check details here
Author
First Published Nov 14, 2022, 11:10 PM IST

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு போர்ட்டல் என்ற டேப்லெட் போன்ற கேட்ஜெட்டை கொண்டு வந்தது. ஆனால், இது சந்தையில் படுதோல்வி அடைந்தது. இதே போல் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பல்வேறு கேட்ஜெட்டுகளை உற்பத்தி செய்யும் பணியில் இறங்கியிருந்தது. 

இதனிடையே பொருளாதார மந்த நிலை காரணமாக, மெட்டா நிறுவனத்தில் பணியாற்றிய முக்கிய பணியாளர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கேட்ஜெட் உற்பத்திகளையும் நிறுத்தப்படும் என்று செய்திகள் வந்துள்ளன. 

இவற்றில் முக்கியமாக பேசப்பட்டது போர்ட்டல் கோ என்ற கேட்ஜெட் ஆகும். இது கடந்தாண்டு தான் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதற்குள்ளாக தயாரிப்புப் பணிகளை நிறுத்தியுள்ளது.

யாருக்கெல்லாம் 5ஜி வேணும் ஓடியாங்க… அனைவரையும் அழைத்த Jio!

மெட்டா நிறுவனத்தில் கிட்டத்தட்ட 11 ஆயிரம் பேர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். ஸ்மார்ட்வாட்ச் கேட்ஜெட்கள் அனைத்தும் அந்த பணியாளர்கள் தயாரித்து வந்த பிரிவு என்று கூறப்படுகிறது. கேட்ஜெட்டுகளை நிறுத்தப்படுவதால், பணியாளர்களும் நீக்கப்பட்டனர். 

இரண்டு கேமராக்களுடன் கூடிய இந்த கேட்ஜெட் அடுத்தாண்டு மார்ச், ஜூன் மாதங்களில் அறிமுகம் செய்யப்படுவதாக இருந்தது. அதன் விலையும் சுமார் 349 அமெரிக்க டாலர் என்று நிர்ணயிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், தற்போதைய சூழலில், நஷ்டத்தை சமாளிக்கவும், லாபத்தை அதிகரிக்கவும் சில கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மெட்டா தள்ளப்பட்டது. 

இதன் விளைவாக, இதுவரையில் அறிவிக்கப்பட்ட முக்கிய கேட்ஜெட்களின் உற்பத்தி தற்போது நிறுத்தப்படுகிறது. மெட்டாவைப் பொறுத்தவரையில் மெட்டா வெர்ஸ் என்ற தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதற்கான VR, AR உபகரணங்கள், ஹெட்செட்டுகள் தயாரிப்பு பணிகள் நடந்தது வந்தது. அவற்றின் நிலைமை என்ன என்பது தெரியவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios