Asianet News TamilAsianet News Tamil

குறைந்த விலையில் சூப்பர் அம்சங்களுடன் புது நோக்கியா போன் அறிமுகம்

90Hz டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமராவுடன் புதிய நோக்கியா G21 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

Nokia G21 with 50MP camera, 5050 mAh battery announced
Author
Tamil Nadu, First Published Feb 14, 2022, 4:26 PM IST

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா G21 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நோக்கியா G20 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். அம்சங்களை பொருத்தவரை நோக்கியா G21 மாடலில் 6.5 இன்ச் HD பிளஸ் வி நாட்ச் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் T606 பிராசஸர், 4GB ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ, 2MP டெப்த் கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நார்டிக் டிசைன், பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இத்துடன் 5050mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

Nokia G21 with 50MP camera, 5050 mAh battery announced

நோக்கியா G21 அம்சங்கள் 

- 6.5  இன்ச் 1600x720 பிக்சல் HD+ வி நாட்ச் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் யுனிசாக் T606 பிராசஸர்
- மாலி-G57 MP1 GPU
- 4GB LPDDR4 ரேம்
- 64GB / 128GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
-  ஆண்ட்ராய்டு 11
- டூயல் சிம்
- 50MP பிரைமரி கேமரா
- 2MP டெப்த் கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 8MP செல்ஃபி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி 
- 5050mAh பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

நோக்கியா G21 ஸ்மார்ட்போன் நார்டிக் புளூ மற்றும் டஸ்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 192 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 14,530 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios