MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Premium போன்... பட்ஜெட் விலை! ₹8,000 அதிரடி தள்ளுபடியில் Google Pixel 10a வாங்குவதற்கான சீக்ரெட்!

Premium போன்... பட்ஜெட் விலை! ₹8,000 அதிரடி தள்ளுபடியில் Google Pixel 10a வாங்குவதற்கான சீக்ரெட்!

Google Pixel 10a கூகுள் பிக்சல் 10a ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.8000 வரையிலான சிறப்புத் தள்ளுபடி ஆஃபர்கள் மற்றும் முழு சிறப்பம்சங்களை இங்கே அறியலாம்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Mar 08 2026, 06:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Google Pixel 10a
Image Credit : Gemini

Google Pixel 10a

கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'பிக்சல் 10a' (Google Pixel 10a) ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துவிட்டது. கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி உலகளவிலும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மிட்-ரேஞ்ச் (Mid-range) ஸ்மார்ட்போன், மார்ச் 6 முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. சிறப்பான கேமரா மற்றும் ஏஐ (AI) அம்சங்களை உள்ளடக்கிய இந்த ஸ்மார்ட்போனை ஃப்ளிப்கார்ட் (Flipkart) மற்றும் கூகுளின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
விலை மற்றும் அதிரடி ஆஃபர்கள்
Image Credit : Gemini

விலை மற்றும் அதிரடி ஆஃபர்கள்

கூகுள் பிக்சல் 10a (8GB RAM மற்றும் 256GB மெமரி) மாடலின் அசல் விலை ரூ.49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் முழுத் தொகையையும் செலுத்தத் தேவையில்லை. அறிமுகச் சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு ரூ.8,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

குறிப்பிட்ட வங்கிகளின் கார்டுகளைப் பயன்படுத்தினால் ரூ.3,000 உடனடி தள்ளுபடியும், கூப்பன்கள் மூலம் ரூ.2,000 வரையிலும் தள்ளுபடி பெறலாம். மேலும், உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் (Exchange) செய்வதன் மூலம் ரூ.3,000 வரை கூடுதல் போனஸ் கிடைக்கும். இந்த அனைத்து சலுகைகளையும் நீங்கள் பயன்படுத்தினால், பிக்சல் 10a மொபைலை வெறும் ரூ.41,999-க்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம். இது லாவெண்டர் (Lavender), பெர்ரி (Berry), பாக் (Fog) மற்றும் அப்சிடியன் (Obsidian) ஆகிய நான்கு கண்கவர் நிறங்களில் கிடைக்கிறது.

35
பிரீமியம் டிஸ்பிளே மற்றும் அதிவேக பிராசஸர்
Image Credit : Google

பிரீமியம் டிஸ்பிளே மற்றும் அதிவேக பிராசஸர்

பிக்சல் 10a-வில் 6.3 இன்ச் அளவிலான Actua pOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh rate) கொண்டிருப்பதால் ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் அனுபவம் மிகச் சிறப்பாக இருக்கும். இதிலிருக்கும் 3,000 நிட்ஸ் (Nits) பீக் பிரைட்னஸ் காரணமாக, கொளுத்தும் வெயிலிலும் ஸ்கிரீன் தெளிவாகத் தெரியும். மேலும், பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i (Gorilla Glass 7i) வழங்கப்பட்டுள்ளது.

செயல்திறனைப் பொறுத்தவரை, இதில் கூகுளின் புதிய 'Tensor G4' சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பை உறுதி செய்ய Titan M2 சிப்பும் இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்துடன் வரும் இந்த போனுக்கு, அடுத்த 7 ஆண்டுகளுக்கு OS மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை கூகுள் வழங்குவது இதன் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆகும்.

45
மிரட்டும் கேமரா
Image Credit : Google

மிரட்டும் கேமரா

பிக்சல் போன்கள் என்றாலே கேமராவுக்குத் தனி மவுசு தான். அந்த வகையில் பிக்சல் 10a-வின் பின்பக்க அமைப்பில் 48MP OIS முதன்மை கேமராவும், 13MP அல்ட்ரா-வைடு கேமராவும் இடம்பெற்றுள்ளன. செல்ஃபிக்களுக்காக 13MP முன்பக்க கேமரா உள்ளது.

55
பேட்டரி வசதி
Image Credit : Google

பேட்டரி வசதி

நாள் முழுவதும் தடையின்றி இயங்க இதில் 5,100mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இது 30W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W வயர்லெஸ் சார்ஜிங் வசதியை ஆதரிக்கிறது. 5G, Wi-Fi 6E, Bluetooth 6 மற்றும் NFC போன்ற அனைத்து லேட்டஸ்ட் கனெக்டிவிட்டி வசதிகளும் இதில் அடக்கம். இந்த பட்ஜெட்டில் ஒரு தலைசிறந்த ஆண்ட்ராய்டு போனை தேடுபவர்களுக்கு பிக்சல் 10a ஒரு 'பெர்ஃபெக்ட் சாய்ஸ்'!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
பூமியை தாக்கப்போகும் சூரிய புயல்கள்: சூரியனின் 3D ரகசியத்தை உடைத்த ஆதித்யா-எல்1!
Recommended image2
200MP கேமரா, கிளாஸ் பாடி டிசைன்: லீக்கான ஒன்பிளஸ் டர்போ 7-ன் அசுரத்தனமான அம்சங்கள்!
Recommended image3
விண்ணில் இருந்து விழும் 1.5 டன் நாசா விண்கலம்: சென்னை, பெங்களூரு ஆபத்தா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
Related Stories
Recommended image1
Google Pay, PhonePe-க்கு செக் வைக்க வரும் Apple Pay! எப்போது அறிமுகம் தெரியுமா?
Recommended image2
டெக் பிரியர்களே தயாரா? Google I/O 2026 தேதிகளை அதிரடியாக அறிவித்தார் சுந்தர் பிச்சை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved