Asianet News TamilAsianet News Tamil

Twitter Blue Tick பரிதாபங்கள்! இயேசு கிறிஸ்துவுக்கும் ‘ப்ளூ’ டிக்.. எலான் மஸ்க் அட்டகாசம்!!

டுவிட்டரில் இயேசு கிறிஸ்து பெயரிலான ஒரு கணக்கு ப்ளூ டிக் பெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

Jesus Christ is now verified on Twitter! Check fake accounts with Blue tick
Author
First Published Nov 11, 2022, 9:09 PM IST

டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் சுயவிவரங்களை (Profile) உறுதிசெய்து, கெளரவப்படுத்தும் வகையில் ப்ளூ டிக் சரிபார்ப்பு குறியீடு வழங்கப்பட்டு வந்தது. எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றிய பிறகு சாமானிய மக்களும் ப்ளூ டிக் குறியீடை பெறலாம் என்றும், இதை  மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 660 ரூபாய்) செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தார். 

அதன்படி, தற்போது அனைவருக்கும் நிபந்தனைகளுடன் கூடிய ப்ளூ டிக், கட்டண அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்தியாவில் மாதம் 719 ரூபாய்க்கு இந்த கட்டண சந்தா திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டண சந்தா செலுத்தி, ப்ளூ பயனராக மாறும் போது, விளம்பரமில்லாமல் டுவீட்களைப் பார்க்கலாம், ட்வீட் செய்யும் போது ப்ளூ சந்தாதாரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 

இந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி, இயேசு கிறிஸ்து என்ற பெயரில் உள்ள கணக்கு ஒன்று, தற்போது ப்ளூ டிக் பெற்றுள்ளது. இதனால், கிறிஸ்துவ மதத்தின் ஒப்பற்ற மகான் இயேசு நாதர் ப்ளூ டிக் பெற்றுள்ளார் என்ற கருத்துகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. அந்தக் கணக்கை ஆராய்ந்த போது, அது 2006 ஆம் ஆண்டு டுவிட்டரில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இந்தியாவிற்கு எப்போது Twitter Blue வரும்? Elon Musk பதில்

சுயவிவரத்தின் பெயர் Jesus Christ என்றும், அதன் அசல் பெயர் @jesus என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெயருக்கு அருகில், ‘தச்சர், குணப்படுத்துபவர், கடவுள்’ என்று இயேசு நாதரின் பண்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், சுவாரசியமாகவும் இருப்பதாக கருத்துகள் தெரிவிக்கின்றன. 

டுவிட்டரில் யார் வேண்டுமானாலும், உரிய ஆவணங்களுடன் 8 டாலர் செலுத்தி ப்ளூ டிக் பெற்றுக்கொள்ளலாம். அப்படி இருக்கையில், இந்த Jesus Christ என்ற கணக்கு எப்படி ப்ளூ டிக் பெற்றது, இது தனியார் நிறுவனமா என்ற கோணத்திலும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னதாக எலான் மஸ்க் ‘ப்ளூ டிக்’ குறித்து அறிவிக்கும் போது, போலியான பெயர்கள் உடைய கணக்குகள் முற்றிலுமாக முடக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜீசஸ் பெயரில் உள்ள டுவிட்டர் கணக்கு: https://twitter.com/jesus

Follow Us:
Download App:
  • android
  • ios