இந்தியாவிற்கு எப்போது Twitter Blue வரும்? Elon Musk பதில்

இந்தியாவிற்கு எப்போது டுவிட்டர் ப்ளூ டிக்  கட்டண அடிப்படையில் நடைமுறைக்கு வரும் என்று பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.

Twitter Blue is expected to roll out in India in less than a month, Elon Musk has confirmed

டுவிட்டரில் அரசியல் தலைவர்கள், நிறுவனங்கள், பிரபலங்களை கவுரப்படுத்தும் விதமாகவும், அவர்களின் ஃப்ரொபைல்களை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் விதமாகவும் ப்ளூ டிக் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் குறியீடு பிரபலங்களின் பெயருக்குப் பின்னால் இருக்கும். 

இதனிடையே, எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதும், ப்ளூ டிக் குறியீடு அனைவருக்கும் வழங்கப்படும் என்றும், இதற்கு மாதம் 8 டாலர் கட்டணம் செலுத்தினால் போதும் என்றும் அறிவித்தார். எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. 

ப்ளூ டிக் கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு எலான் மஸ்க் பதிலடி கொடுக்கும் வகையில் டுவீட் செய்திருந்தார். அதில் அவர், ‘குறை கூறுபவர்கள் குறை கூறிக்கொண்டே இருங்கள், என்னைத் திட்டுபவர்கள் திட்டிக் கொண்டே இருங்கள், ஆனால், 8 டாலர் என்ற கட்டணம் மாறாது’ என்று திட்டவட்டமாக அறிவித்தார். 

மேலும், இதனை நவம்பர் 7 ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பணியாளர்களு்கு கெடு விதித்தார். அதன்படி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஐபோன் தளத்தில் மாதம் 8 டாலருக்கு ப்ளூ டிக் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவில் கட்டண அடிப்படையிலான ப்ளூ டிக் வழங்கும் திட்டம் எப்போது வரும் என்று டுவிட்டர் பயனர் ஒருவர் எலான் மஸ்க்கிற்கு கேள்வி எழுப்பினார். அதற்கு எலான் மஸ்கும் பதில் அளித்துள்ளார். அதில் அவர், ‘இம்மாதம் முடிவதற்குள் வந்துவிடும்’ என்று தெரிவித்துள்ளார். 

 

 

இதனால் இந்தியாவிலும் விரைவில் கட்டண அடிப்படையிலான ப்ளூ டிக் குறியீடு வழங்கும் முறை அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவிற்குள் வரும்போது அதற்கான கட்டணம் எவ்வளவு இருக்கும் என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை. 

Twitter Layoffs: பெருவாரியான பணியார்களை பணி நீக்கம் செய்தது ஏன்? Elon Musk பதில்

8 டாலர் கட்டணம் என்பது தற்சமயத்திற்கு அமெரிக்கா மற்றும் ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் அதின் விலை கிட்டத்தட்ட 655 ரூபாய். இது சற்று அதிகமான கட்டணம். எனவே, இந்தியாவில் ப்ளூ டிக் கட்டணம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios