ஆப்பிள் iPhone 17 தொடர் செப்டம்பர் 9 அன்று அறிமுகமாகிறது. நான்கு மாடல்கள் - iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Air, மற்றும் iPhone 17 Pro Max - வெளியாகும். இந்த நிகழ்வை ஆப்பிள் வலைத்தளம், YouTube மற்றும் Apple TV-யில் நேரலையில் காணலாம்.
ஆப்பிள் ரசிகர்கள் அவளுடன் எதிர்பார்த்த iPhone 17 தொடர் செப்டம்பர் 9 அன்று "Awe Dropping" நிகழ்வில் அறிமுகமாகிறது. அமெரிக்காவில் நடைபெறும் இந்த நிகழ்வில், iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Air, iPhone 17 Pro Max ஆகிய நான்கு மாடல்கள் வெளியாகும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வை நேரலையில் ஆப்பிள் வலைத்தளம், YouTube சேனல் மற்றும் Apple TV ஆப்பில் காணலாம்.
புதிய தொடரில் அனைவரின் கவனமும் iPhone 17 Pro Max மீது குவிந்துள்ளது. இந்தியாவில் இதன் விலை 256GB வேரியண்ட்டுக்கு ரூ.1,64,990 ஆக இருக்கலாம். மற்ற மாடல்களில் iPhone 17 ரூ.89,990, iPhone 17 Air ரூ.99,990, iPhone 17 Pro ரூ.1,34,990க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Pro மற்றும் Pro Max மாடல்கள் ஒரே மாதிரி வடிவமைப்புடன் இருக்கும். ஆப்பிள் லோகோவில் சின்ன மாற்றத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டார்க் ப்ளூ, கிரே, பிளாக், வெள்ளை மற்றும் ஆரஞ்சு ஆகிய 5 நிறங்களில் அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது. iPhone 17 Air ஆனது மெல்லிய வடிவமைப்புடன், பின்புறத்தில் 48MP ஒற்றை கேமராவுடன் வரும். இது Google Pixel 10க்கு நேரடி போட்டியாளராக இருக்கும். அதே சமயம் iPhone 17 அடிப்படை மாடலில் 48MP + 12MP பின்புற கேமரா மற்றும் 24MP செல்ஃபி கேமரா வழங்கப்படும். வண்ணங்களில் லைட் கோல்ட், ஊதா, பச்சை, நீலம் போன்ற விருப்பங்கள் தரப்படலாம்.
Pro மற்றும் Pro Max மாடல்கள் கேமரா அம்சங்களில் அதிக கவனம் பெற்றுள்ளன. 48MP முதன்மை கேமரா, 48MP அல்ட்ரா வைட், 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் தரப்படுகின்றன. ProMotion OLED திரை 120Hz புதுப்பிப்பு வீதம் உடன் வரும். மேலும் முதல் முறையாக Apple A19 Pro சிப் பயன்படுத்தப்படுகிறது. அதிகபட்சமாக 12GB RAM, மேம்பட்ட செயல்திறன், சக்திவாய்ந்த பேட்டரி ஆகியவை iPhone 17 Pro Max-ஐ பிரீமியம் தரத்தில் உயர்த்தப்படும்.
