Asianet News TamilAsianet News Tamil

சூரியனுக்கு வெளியே வெப்பத்தை உமிழும் கரோனாவின் ரகசியத்தை உடைக்குமா ஆதித்யா எல் 1?

சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை 6,000 டிகிரி செல்சியசாக இருக்கும்போது, அதன் வெளிப்புற அடுக்கான கரோனா ஒரு மில்லியன் டிகிரிக்கு மேல் வெப்பத்தை உமிழ்கிறது என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காமல் உள்ளது.

Can Aditya - L1 crack the secret of the corona million degrees hotter outside the Sun?
Author
First Published Sep 1, 2023, 12:09 PM IST

பூமியின் மிக முக்கிய கிரணகமாக திகழும் சூரியனைப் பற்றி அறிந்து கொள்வதற்கு பல ஆண்டுகளாக முயற்சிகள் நடந்து வருகின்றன. பூமியில் அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு காரணமாக இருப்பது சூரியன். இதனால், சூரியனைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இயற்பியல் விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். 

சூரிய கிரகத்தில் நடக்கும் மர்மங்களை அறிந்து கொள்வதற்கு இஸ்ரோ செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்1 விண்கலத்தை அனுப்புகிறது. இந்த விண்கலம் நாளை ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்படும். சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக கடந்த மாதம் 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் காலடி வைத்தது. வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பின்னர், அதில் இருந்து வெளியேறிய ரோவர் அதிசயத்தக்க படங்களை அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. நிலவில் சல்பர் இருப்பதை ரோவர் கண்டறிந்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரோ நாளை ஆதித்யா எல்1 விண்கலத்தை சூரியனை ஆய்வு செய்வதற்கு அனுப்புகிறது. இது இந்தியாவுக்கு கிடைக்கும் அடுத்தகட்ட கவுரமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும், சவால்களும் அதிகமாக இருக்கின்றன.

ஆதித்யா எல்1 முக்கிய ஆய்வுக் கருவியை வடிவமைத்தது யார்? இதுதான் ரொம்ப முக்கியம்? இஸ்ரோ விளக்கம்

1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரிய-பூமி அமைப்பின் முதல் 'லாக்ரேஞ்ச் பாயின்ட்' (L1) சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் விண்வெளியில் இந்தியாவின் முதல் சூரிய விண்கலம் நிலைநிறுத்தப்படுவதால், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க விஞ்ஞானிகளுக்கு இது ஒரு படியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆதித்யா எல்1 சூரிய ஆய்வு எதற்காக?
இந்திய விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக சூரியனை ஆய்வு செய்து வருகின்றனர். பூமியை அடையும் சூரியக் கதிர்வீச்சு, வளிமண்டலத்தில் உள்ள மாசுக்களால் சிதறடிக்கப்படுகிறது என்று காலம் காலமாக கூறப்படுகிறது. எனவே, எடுக்கப்பட்ட படங்கள் பொதுவாக மங்கலாக கிடைத்துள்ளன. ஆனால், விண்வெளியில் எல்1 புள்ளியில் நிலைநிறுத்தப்படும் ஆதித்யா எல்1 விண்கலத்தால் சூரியன் மற்றும் அதன் வெவ்வேறு அடுக்குகளை தெளிவாக படம் பிடிக்க முடியும். சூரியன் பூமியில் இருந்து சுமார் 150 மில்லியன் கிமீ தொலைவில் இருந்தாலும், எல்1 புள்ளி வெறும் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ளது (மொத்த தூரத்தில் வெறும் 1 சதவீதம் மட்டுமே). எந்தவித கிரகண தடைகளும் இல்லாமல் விண்கலம் சூரியனை தொடர்ந்து ஆய்வு செய்ய முடியும்.

ஆதித்யா எல்-1 சூரியனுக்கு எவ்வளவு பக்கத்தில் போகும்? இதற்கு முன் மிக அருகில் சென்று ஆய்வு செய்தது யார்?

இந்திய வான் இயற்பியல் நிறுவன பேராசிரியர் ரமேஷ் இதுகுறித்து ஆங்கில மீடியாவுக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''கரோனா எனப்படும் சூரியனின் வெளிப்புற அடுக்கை நாம் இன்னும் விரிவாகப் படிக்க வேண்டும் என்று பல வருட ஆய்வுகள் காட்டுகின்றன. இதை இஸ்ரோ போன்ற ஆய்வகத்தில் இருந்து கண்காணிப்பது சாத்தியமில்லை. முதலாவதாக, காலை, மாலை என வரம்புகள் உள்ளன.  இரண்டாவதாக, முழு சூரிய கிரகணத்தின் போது மட்டுமே சூரியனின் வெளிப்புற அடுக்கை நாம் தடையின்றி காண முடியும். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்காது மற்றும் சில முறை மட்டுமே நடக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆதித்யா எல்1 பெலோடில் இருக்கும் VELC எனப்படும் visible emission Line Coronagraph தான் ஆய்வு செய்து குறிப்புகளை இஸ்ரோவுக்கு அனுப்பும். 

சோலார் பேனல்கள்:
வானியல் ஆராய்ச்சியைத் தவிர, செயற்கைக்கோள்களில் மின்னணு உபகரணங்களை சேதப்படுத்தும் துகள்களை சூரியன் அடிக்கடி வெளியேற்றுகிறது. காந்த ஆற்றலால் நிரப்பப்பட்ட இந்த துகள்கள்  கரோனல் மாஸ் எஜெக்ஷன்ஸ் (CME) என்று அழைக்கப்படுகிறது. இது சோலார் பேனல்கள் அல்லது ஆய்வுக்கு அனுப்பப்படும் உபகரணங்களை செயலிழக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது. 

சூரியனை நோக்கி 1.5 மில்லியன் கி.மீ. பயணிக்கும் ஆதித்யா எல்1! என்னென்ன ஆய்வுகள் செய்யும்?

சாட்டிலைட் பாதிக்கலாம்:
தற்போது 7,000 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றி வருகின்றன. வரும் ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை உயரலாம். தொலைத்தொடர்பு, ரிமோட் சென்சிங், ஜிபிஎஸ் மற்றும் வானிலை முன்னறிவிப்பு போன்ற பல்வேறு கூறுகளை அறிந்து கொள்வதற்கு சாட்டிலைட்டுகள் அனுப்பப்படுகின்றன. இவ்வளவு சாட்டிலைட்டுகள் இருந்தாலும், கரோனாவில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு புயல்களை கண்டறிய முடியவில்லை. சில நேரங்களில் அவை பூமியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம், சாட்டிலைட்டுகளையும் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. விநாடிக்கு 3000 கி.மீட்டர் வேகத்தில் பல்வேறு கோணங்களில் இருந்து பயணித்து பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அறியப்படுகிறது. 

கரோனா என்றால் என்ன?
சூரியனின் கரோனா என்பது சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற பகுதியாகும். கரோனா பொதுவாக சூரியனின் மேற்பரப்பின் பிரகாசமான ஒளியால் மறைக்கப்படுகிறது. சாதாரணமாக இந்த ஒளி வட்டத்தைக் காண முடியாது. இருப்பினும், முழு சூரிய கிரகணத்தின் போது கொரோனாவைப் பார்க்க முடியும். இங்கிருந்துதான் சூரியக் காற்றும் உருவாகிறது. 

நூறு நாட்கள் ஆகும்:
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் புறப்பட்டதும், அது பூமியைச் சுற்றியுள்ள குறைந்த புவி சுற்றுப்பாதையில் (LEO) நிலைநிறுத்தப்படும். பின்னர், அதன் சுற்றுப்பாதை மேலும் நீள்வட்டமாக மாற்றப்படும். பின்னர், பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து வெளியேறி L1 புள்ளியை நோக்கி விண்கலம் செலுத்தப்படும். ஆதித்யா-எல்1 அதன் துல்லியமான சுற்றுப்பாதையை அடைய சுமார் நான்கு மாதங்கள், அதாவது நூறு நாட்களுக்கு மேலாகும். 

VELC உள்பட ஏழு பெலோடுகள்:
ஆதித்யா எல்1-ல் VELC உள்பட ஏழு பெலோடுகள் அனுப்பப்படுகிறது. சூரிய லேயர்கள், photosphere, chromosphere, solar winds, magnetic fields ஆகியவற்றை ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இதுவரை ஐரோப்பியா மற்றும் அமெரிக்க நாடுகள் சூரியனை ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பி உள்ளன. ஆனால், அவை இதுவரை கரோனா பற்றி எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. 

Follow Us:
Download App:
  • android
  • ios