Asianet News TamilAsianet News Tamil

குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாட்டில் Biocon தலைவர் கிரன் மஜும்தர்-ஷா & Pulitzer வின்னர் சித்தார்த்தா முகர்ஜி உரை

கார்னெகி இந்தியாவின் வருடாந்திர குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாட்டின் 3வது நாளில் விவாதிக்கப்படும் தலைப்புகள், கலந்துகொண்டு உரையாற்றுபவர்கள் விவரங்களை பார்ப்போம். 

Biocon Chief Kiran Mazumdar Shaw in conversation with Pulitzer winner Siddhartha Mukherjee at The Global Technology Summit
Author
First Published Nov 24, 2022, 10:40 PM IST

கார்னெகி இந்தியாவின் வருடாந்திர குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாட்டின் 3வது நாளில் கூறுபடுத்துதல் மற்றும் அதன் விளைவுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மாநாட்டின் 3ம் நாளில் Biocon எக்ஸிகியூடிவ் தலைவர் கிரன் மஜூம்தர்-ஷா மற்றும் Pulitzer பரிசு வென்ற எழுத்தாளர் & கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ உதவி விரிவுரையாளரான சித்தார்த்தா முகர்ஜி ஆகிய இருவரும் கலந்துகொள்கின்றனர். தனிப்பட்ட புற்றுநோய் சிகிச்சை குறித்த விவாதத்தில் கலந்துகொள்கின்றனர். 

IN-SPACe மற்றும் புதிய தொடக்கங்களை முன்னிலைப்படுத்தும் குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாடு

மேலும் அதேநாளில் உப தலைப்புகளான கூறுபடுத்துதல் மற்றும் ஜியோபாலிடிக்ஸில் அது ஏற்படுத்தும் மாற்றங்கள், நிதி சேர்க்கைக்கான ஓபன் சோர்ஸ் டெக்னாலஜி, பயோ பாதுகாப்புக்கான கட்டமைப்பு, நிகர-பூஜ்ஜிய பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவை தொடர்பான விவாதங்கள் நடைபெறும். 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டின் 3வது நாளில் புத்தக வெளியீடும் செய்யப்படவுள்ளது.Grasping Greatness: Making India a Leading Power என்ற புத்தக வெளியீடும் உள்ளது. ஆஷ்லி ஜே.டெல்லிஸ், பிபெக் டெப்ராய், சி.ராஜா மோகன் ஆகிய மூவரும் இந்த புத்தகத்தை எடிட் செய்துள்ளனர்.
 
3ம் நாளில் பேசும் பேச்சாளர்கள் விவரம்: இந்தியாவின் ஜி20 ஷெர்பா அமிதாப் கண்ட், பிரேசில் ஜி20 ஷெர்பா சார்கியூஸ் ஜோஸ், ஆசிய சொசைட்டி பாலிஸி நெட்வொர்க்கின் மூத்த உறுப்பினர் சி.ராஜா மோகன், சிங்கப்பூர் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோஸ்ஃபின் டியோ, பிரைவஸி பாலிஸி டைரக்டர் மெலிண்டா க்ளேபாக், ஆஷ்லி ஜே.டெல்லிஸ், ரிசர்வ் வங்கி இன்னோவேஷன் ஹப் சி.இ.ஓ ராஜேஷ் பன்சால், டாடா டிரஸ்ட்ஸின் நிதி சேர்க்கை சீனியர் ஆலோசகர் எம்.ஜி.வைத்யன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். 

3ம் நாளில் கலந்துகொள்ளும் சில சுவாரஸ்யமான பேனல்கள்:

• உரையாடல்: ஜி20 Troika: இந்தியா, இந்தோனேஷியா, பிரேசில்
• ரஷ்யா - உக்ரன் போரில் கற்ற பாடங்கள்
• ஆரோக்கியத்திற்கு விரயம்
• நிலைத்தன்மையை ஊக்குவித்தல்: நிகர-பூஜ்ஜிய பொருளாதாரத்திற்கு மாறுதல்
• லோக்கல் கண்டெண்ட்: உலகளவில் இந்தியாவின் மென் சக்தியின் கருவி
• பயோ பாதுகாப்புக்கான கட்டமைப்பு
• ஓபன் நெட்வொர்க் டெக்னாலஜி: நிதி சேர்க்கைக்கான டிரைவர்
• தனிப்பட்ட புற்றுநோய் சிகிச்சை

குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாட்டின் 7வது எடிஷனில், தொழில்துறை வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மற்ற பங்குதாரர்கள் கலந்துகொண்டு டெக்னாலஜி மற்றும் ஜியோபாலிடிக்ஸ் மாறிவரும் தன்மைகள் பற்றி விவாதிக்கின்றனர். 

பொது அமர்வுகளில் இந்தியா மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள், பேனல்கள், முக்கியமான உரைகள் மற்றும் அரசு, தொழில்துறை, கல்வித்துறை, சிவில் சமூக பிரதிநிதிகளுடனான உரையாடல்கள் ஆகியவையும் அடங்கும். 

குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்கிறார்

உலகளவிலான தொழில்துறை நிபுணர்கள், தொழிலதிபர்கள், ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் என பலதரப்பினரும் டெக்னாலஜி கொள்கை, சைபர் விரிதிறன், பொது சுகாதாரம், டிஜிட்டல் கட்டமைப்பு, குறைகடத்திகள், ஜி20-யில் இந்தியாவின் பிரசிடென்ஸி ஆகியவை குறித்து உரைநிகழ்த்துகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios