IN-SPACe மற்றும் புதிய தொடக்கங்களை முன்னிலைப்படுத்தும் குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாடு
கார்னெகி இந்தியாவின் குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாட்டில், விண்வெளி, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டம் மிஷன், குறைகடத்தி பார்ட்னர்ஷிப் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கார்னெகி இந்தியாவின் குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாட்டில், விண்வெளி, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டம் மிஷன், குறைகடத்தி பார்ட்னர்ஷிப், சுகாதாரத்துறைக்கு இடையூறாக இருப்பவை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
”எதிர்காலத்திற்கான கூட்டணிகளை வழிசெலுத்துதல் என உப தலைப்பில் மாநாட்டின் 2ம் நாளில் விவாதிக்கப்படவுள்ளது.
மாநாட்டின் 2ம் நாளில் மேலும் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடக்கவுள்ளன. ”IN-SPACe-ல் என்ன புதிது?”, ”இந்தியா ஒரு ஸ்டார்ட் அப் தேசம்”, ”ஸ்டார்ட் அப் 20: ஜி20 நிகழ்ச்சி நிரல்”, ”பேனல்: Bridgital USP: தனித்துவ குறைகடத்தி பார்ட்னர்ஷிப்புகளை கட்டமைத்தல்”, டெக்னாலஜி & டிரேட்: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்”, Responsible AI: A Strategic Imperative" ஆகிய தலைப்புகளில் விவாதங்கள் நடக்கவுள்ளன.
குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்கிறார்
After Tiananmen: The Rise of China என்ற புத்தகத்தை பற்றி விஜய் கோகலே பேசுகிறார். இந்த புத்தக வெளியிட்டூ விழாவில் கலந்துகொள்ள https://events.ceip.org/btgts2022 என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும்.
குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாட்டின் 2வது நாளில் பேசும் பேச்சாளர்கள்: விக்டர் ஜோசஃப் டி(இஸ்ரோ-வின் அசோசியேட் சைண்டிஃபிக் செயலாளர்), விஜய் கோகலே(கார்னெகி இந்தியாவின் Non-resident சீனியர் உறுப்பினர்), அஜய் குமார் சூட் (இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர்), ஸ்ரீநாத் ராகவன் (கார்னெகி இந்தியாவின் Non-resident சீனியர் உறுப்பினர்), நிக் க்ளெக் (பிரிட்டன் முன்னாள் துணை பிரதமர்), ரோஹினி ஸ்ரிவத்சா ( மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் தேசிய டெக்னாலஜி அலுவலர்), சமந்தா ஹோஃப்மேன் (ஆஸ்திரேலிய மூலோபாய கொள்கை இன்ஸ்டிடியூட்டின் சீனியரனலிஸ்ட்) ஆகியோர் ஆவர்.
குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாட்டின் 7வது எடிஷனின் முக்கிய சாராம்சம், டெக்னாலஜியின் ஜியோபாலிடிக்ஸ் ஆகும். சர்வதேச கூட்டணிகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் புவிசார் அரசியல் மாற்ற உலகில் தற்போதைய காலநிலையை ஆராயும் உயர்தர நிகழ்வு நவம்பர் 29 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறுகிறது.
குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாட்டை கார்னெகி இந்தியாவுடன் இணைந்து நடத்துகிறது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். உலகளவிலான தொழில்துறை நிபுணர்கள், தொழிலதிபர்கள், ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் என பலதரப்பினரும் டெக்னாலஜி கொள்கை, சைபர் விரிதிறன், பொது சுகாதாரம், டிஜிட்டல் கட்டமைப்பு, குறைகடத்திகள், ஜி20-யில் இந்தியாவின் பிரசிடென்ஸி ஆகியவை குறித்து உரைநிகழ்த்துகின்றனர்.
கார்னெகி இந்தியா குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாடு நவம்பர் 29 தொடக்கம்
பொது அமர்வுகளில் இந்தியா மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள், பேனல்கள், முக்கியமான உரைகள் மற்றும் அரசு, தொழில்துறை, கல்வித்துறை, சிவில் சமூக பிரதிநிதிகளுடனான உரையாடல்கள் ஆகியவையும் அடங்கும்.
குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஆன்லைனில் பதிவு செய்யலாம்.