கார்னெகி இந்தியா குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாடு நவம்பர் 29 தொடக்கம்

குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாடு, டெக்னாலஜியின் ஜியோபாலிடிக்ஸ் என்ற பெயரில் வரும் நவம்பர் 29 முதல் டிசம்பர் 1 வரை நடக்கவுள்ளது. 
 

Carnegie India Global Technology Summit to kick off on November 29

குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாடு மற்றும் கார்னெகி இந்தியாவின் வருடாந்திர ஃப்ளாக்‌ஷிப் உச்சிமாநாடு நடக்கவுள்ளது. கர்நாடக அரசு மற்றும் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய அரசு இணைந்து நடத்துகிறது.

குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாடு, டெக்னாலஜியின் ஜியோபாலிடிக்ஸ் என்ற பெயரில் வரும் நவம்பர் 29 முதல் டிசம்பர் 1 வரை நடக்கவுள்ளது. 

இந்த உச்சிமாநாட்டின் முக்கிய அம்சங்கள், தொழில்நுட்ப கொள்கைகள், சைபர் விரிதிறன், டிஜிட்டல் ஹெல்த், டிஜிட்டல் கட்டமைப்பு, குறைகடத்திகள், ஜி20யில் இந்தியாவின் பிரசிடென்ஸி உள்ளிட்ட இன்னும் பல. 

பொது அமர்வில் அதிக தாக்கம் ஏற்படுத்தும் இந்திய மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் உரை, முக்கியமான உரைகள், அரசு, தொழில்துறை, சிவில் சொசைட்டி, கல்வித்துறை ஆகிய துறைகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஆகியவையும் அடங்கும். 

இந்தியாவின் ஜி20 ஷெர்பா அமிதாப் காந்த், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட், ஜப்பான் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சானே டகைச்சி, இண்டெல் கோ ஆபரேஷனின் இந்தியாவிற்கான தலைவர் நிவ்ருத்தி ராய், மைக்ரோசாஃப்ட் ஆசியாவிற்கான இயக்குநர் மார்கஸ் பார்ட்லி ஜான்ஸ், Meta-வின் தனியுரிமை கொள்கை இயக்குநர் மெலிண்டா க்ளேபாக், யுனிசெஃப் ஹெல்த் செண்டர் ஆஃப் எக்ஸலென்ஸின் நிறுவனர் சீன் பிளாஸ்க், ஐ.நா டெக்னாலஜியின் தலைமை தூதுவர்  அமன்தீப் சிங் கில் ஆகியோர் இந்த உச்சிமாநாட்டில் உரையாற்றுகின்றனர். 

தொழில்துறை நிபுணர்கள், தொழிலதிபர்கள், ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கு குளோபல் டெக்னாலஜி உச்சிமாநாடு அரிதினும் அரிதான வாய்ப்பு. இந்த உச்சிமாநாட்டில் மெய்நிகராகவும் கலந்துகொள்ளலாம். இங்கே கிளிக் செய்து பதிவு செய்துகொள்ளலாம்.

கார்னெகி இந்தியா என்பது புதுடெல்லியை மையமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழு ஆகும். இது பெய்ஜிங், பெய்ரூட், பிரஸ்ஸல்ஸ் மற்றும் வாஷிங்டனில் உள்ள 150 க்கும் மேற்பட்ட அறிஞர்களை உள்ளடக்கிய ஒரு வலுவான உலகளாவிய வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இது தொழில்நுட்பம் மற்றும் சமூகம், அரசியல் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளில் கவனம் செலுத்துகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios