boAt நிறுவனத்தின் பிரபலமான இயர்பட்ஸ் மாடல்கள் தற்போது அமேசானில் வெறும் ரூ.999-க்கு கிடைக்கின்றன. Airdopes 141, Airdopes Joy, மற்றும் Airdopes 311 Pro போன்ற மாடல்களில் 70%க்கும் மேல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இப்போது இயர்பட்ஸ் இல்லாமல் நாள் முழுவதும் வேலை செய்வது பலருக்கும் சிரமமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இயர்பட்ஸை பயன்படுத்தி வருகின்றனர். நல்ல குவாலிட்டி இயர்பட்ஸ் வாங்க வேண்டுமென நினைத்தால், 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். இதன் குறைந்த விலை தீர்வை தற்போது அமேசான் வழங்கி வருகிறது. பிரபலமான போட் (boAt) நிறுவனம் தயாரித்த பல இயர்பட்ஸ் தற்போது வெறும் ரூ.999-க்கு கிடைக்கிறது.
போட் ஏர்டோப்ஸ் 141
இந்த மாடல் இயர்பட்ஸ் வழக்கமாக ரூ.4,490 விலையில் விற்கப்படுகிறது. ஆனால் அமேசானில் 78% தள்ளுபடி வழங்கப்பட்டதால், வெறும் ரூ.999-க்கு கிடைக்கிறது. இதில் 6 மணிநேர பேட்டரி ஆயுள், வேகமான சார்ஜிங், குரல் கட்டுப்பாடு, தொடு கட்டுப்பாடு, ஒலி அளவு கட்டுப்பாடு போன்ற அம்சங்கள் உள்ளன.
போட் ஏர்டோப்ஸ் ஜாய்
சிறிய, அழகான வடிவமைப்புடன் வரும் இந்த மாடல் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. அசல் விலை ரூ.3,490 ஆனால் தற்போது 71% தள்ளுபடியில் வெறும் ரூ.999-க்கு வாங்கலாம். இதில் 35 மணிநேர பேட்டரி ஆயுள் கிடைப்பது ஒரு பெரிய பலனாகும். கூடுதலாக, 2 Mic ENx, டைப்-சி போர்ட், V5.3 புளூடூத் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
போட் ஏர்டோப்ஸ் 311 ப்ரோ
மிகவும் மேம்பட்ட அம்சங்களுடன் வரும் இந்த மாடல் இயர்பட்ஸ் அசல் விலை ரூ.4,990. ஆனால் தற்போது 80% தள்ளுபடியில் வெறும் ரூ.999-க்கு கிடைக்கிறது. மெக்கானிக் போல்ட் கருப்பு நிறத்தில் கண்ணைக் கவரும் வடிவமைப்புடன் வருகிறது. 311 Pro இயர்பட்ஸில் 50 மணிநேரம் நீடிக்கும் பேட்டரி, வேகமான சார்ஜிங் வசதி, இரட்டை மைக் ENx டெக், LED டிரான்ஸ்பரன்சி, குறைந்த லேட்டன்சி, IPX4 வசதி, IWP டெக் உள்ளிட்டவை.
நீண்ட நேரம் கேட்க விரும்புவோருக்கும், கேமிங் பிரியர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். மொத்தத்தில், குறைந்த பட்ஜெட்டில் boAt இயர்பட்ஸ் தேடுபவர்களுக்கு அமேசானின் இந்த சலுகைகள் மிகப் பெரிய வாய்ப்பாகும். வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு முன்பு சரிபார்த்துக் கொள்வது அவசியம் ஆகும்.
