லுலு மால் vs டிமார்ட்: குறைந்த விலையில் அதிக பொருள் எது தருகிறது தெரியுமா?
லுலு மால், டிமார்ட்டை விட விலை சற்று அதிகமாக இருந்தாலும், பொருட்களின் தரம், பல்க் வாங்கும் வசதி, அதிக சலுகைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் காரணமாக மக்கள் லுலு மாலையே விரும்புகின்றனர்.

லுலு மால் vs டிமார்ட்
யு.ஏ.ஐ.யை தளமாகக் கொண்ட லுலு குரூப் (LuLu Group) இந்தியாவில் மிக வேகமாக விரிவடைந்துள்ளது. கொச்சி, லக்னோ, ஹைதராபாத், திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள லுலு மால் (LuLu Mall)-கள், ஒரு ஹைப்பர் மார்க்கெட்டும், பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோருமான அனுபவத்தையும் ஒரே கூரையின் கீழ் தருகின்றன. குறிப்பாக கொச்சி மால் 25 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. அங்கு காய்கறிகள், தினசரி தேவைகள், பிராண்டட் உடைகள், எலக்ட்ரானிக்ஸ், ஹோம் அப்ளையன்ஸ் என 20,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன.
விலைக்குக் கூட சலுகை
லுலு மாலில் வாரந்தோறும் Price Buster Offers அறிவிக்கப்படுகிறது. உதாரணமாக, அரிசி, எண்ணெய், ஸ்நாக்ஸ் போன்ற பொருட்கள் ரூ.99 முதல் கிடைக்கின்றன. "Buy 1 Get 1" சலுகையும் அடிக்கடி உண்டு. தீபாவளி, ஓணம், சுதந்திர தினம் போன்ற பண்டிகை காலங்களில் எலக்ட்ரானிக்ஸ், உடைகள், ஹோம் அப்ளையன்ஸ்களுக்கு 70% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கருப்பு வெள்ளி மற்றும் நள்ளிரவு விற்பனை நிகழ்ச்சிகளில் சில பொருட்களுக்கு 90% வரை சலுகை கிடைத்துள்ளது. LuLu Happiness Program மூலம் வாடிக்கையாளர்கள் பாயிண்ட்ஸ் சேகரித்து கூடுதல் தள்ளுபடி பெறலாம்.
லுலு மால் சலுகைகள்
லுலு மால்-ஐ மக்கள் வெறும் ஷாப்பிங்கிற்காக மட்டுமல்ல, பொழுதுபோக்கு காரணமாகவும் விரும்புகின்றனர். லக்னோவில் உள்ள LuLu Mall-இல் பவுலிங், கேமிங் சோன்கள், குழந்தைகளுக்கான பிளே ஏரியா உள்ளது. உணவுப் பிரிவு உலகப் பிராண்டுகளிலிருந்து தென்னிந்திய உணவுகள் வரை அனைத்தையும் தருகிறது. கொச்சி LuLu Mall-இல் மட்டும் 20-க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்படுகின்றன. கூடுதலாக, மாலுக்குள் உள்ள மால்டிப்ளெக்ஸ் தியேட்டரில் திரைப்பட அனுபவமும் தரப்படுகிறது.
ஆன்லைன் ஷாப்பிங்
லுலு ஆன்லைன் தளம் மற்றும் ஆப்பின் மூலம் பொருட்கள் வீட்டிலிருந்தே வாங்கலாம். அதே நாளில் இலவச டெலிவரி, ரியல் டைம் கூப்பன்கள், தள்ளுபடிகள், மான்சூன் ஷாப்பிங் ஃபெஸ்டிவலில் 65% வரை சலுகைகள் கிடைத்தன. டிமார்ட்டை விட லுலு மாலில் விலை சற்று அதிகமாக இருந்தாலும், பொருட்களின் தரம், bulk-ஆக வாங்கும் வசதி மற்றும் அதிக சலுகைகள் காரணமாக மக்கள் LuLu Mall-ஐ விரும்புகின்றனர்.
டிமார்ட் தள்ளுபடி
ஒரே இடத்தில் எல்லா பிரிவுகளும் கிடைப்பது, விலைக்கு ஏற்ற சலுகைகள், பொழுதுபோக்கு வசதிகள், மற்றும் ஆன்லைன் சேவைகளின் வசதிகள் என இவை அனைத்தும் லுலு மாலில் டிமார்ட்டை விட முன்னிலைப்படுத்தப்படுகிறது. அடிக்கடி தள்ளுபடிகள் மற்றும் பிரத்தியேக அனுபவங்களுடன், லுலு மால் இந்திய குடும்பங்களின் ஷாப்பிங் டெஸ்டினேஷனாக வேகமாக மாறி வருகிறது.