இந்த எக்ஸ்பிரஸ்வேயில் FASTag பாஸ் செல்லாது.. எங்கெல்லாம் தெரியுமா?
மத்திய அரசு சாலை பயணிகளுக்கு ஒரு மாத ஃபாஸ்ட்டேக் பாஸ் ரூ.3,000க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சில எக்ஸ்பிரஸ்வே மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இந்த பாஸ் செல்லாது என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை.

ஃபாஸ்ட் டேக் பாஸ் எக்ஸ்பிரஸ்வே
ஆகஸ்ட் 15ஆம் தேதி மத்திய அரசு சாலை பயணிகளுக்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு மாத ஃபாஸ்ட் டேக் பாஸ் (FASTag) ரூ.3,000க்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு வருடத்தில் 200 முறை பயணிக்கலாம். ஒவ்வொரு முறை வண்டி ஒரு NHAI டோல் பிளாசாவை கடந்தால், அது ஒரு ‘டிரிப்’ ஆகக் கணக்கிடப்படும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
இந்த பாஸ் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பராமரிக்கும் சாலைகளில் மட்டுமே செயல்படும். உதாரணமாக, டெல்லி–கொல்கத்தா செல்லும் NH-19, ஆக்ரா–மும்பை செல்லும் NH-3, வட–தெற்கு வழித்தடமான NH-48, போர்பந்தர்–சில்சார் NH-27, கிழக்கு கடற்கரை வழித்தடம் NH-16, புனே–மச்சிலிபட்டணம் NH-65, ஆக்ரா–பிகானேர் NH-11, ஸ்ரீநகர்–கன்யாகுமரி NH-44 ஆகியவை இதில் அடங்கும்.
ஃபாஸ்ட் டேக் பாஸ்
இதற்குப் பிறகு, டெல்லி–மும்பை எக்ஸ்பிரஸ்வே, ஈஸ்டர்ன் பெரிஃபெரல் ரோடு, மும்பை–நாசிக், மும்பை–சூரத், சென்னை–சேலம், மும்பை–ரத்தநகிரி, டெல்லி–மீரட் மற்றும் அகமதாபாத்–வடோதரா எக்ஸ்பிரஸ்வே ஆகியவையும் இந்த பாஸ் பயன்படுத்தலாம்.
மாநில நெடுஞ்சாலைகள்
ஆனால், மாநில அரசுகள் பராமரிக்கும் எக்ஸ்பிரஸ்வே மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இந்த பாஸ் செல்லாது. உதாரணமாக, யமுனா எக்ஸ்பிரஸ்வே, பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே, புந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே போன்ற இடங்களில் வழக்கமான FASTag பணம் செலுத்தியே பயணிக்க வேண்டும்.
கார் வாகன ஓட்டிகள்
NHAI தகவலின்படி, திட்டம் அறிமுகமான நான்கு நாட்களில் மட்டும் 5 லட்சம் பேர் இந்த FASTag வருட பாஸை வாங்கியுள்ளனர். அதிகமாக தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா மாநிலங்களில் வாங்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா டோல் பிளாசாக்களில் அதிக பயன்பாடு பதிவாகியுள்ளது. அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளுக்கு இது ஒரு பெரிய சலுகையாக இருக்கும்.