ஆம்னி பேருந்தில் பயணம்.. மர்மமான முறையில் இறந்த இளைஞர் - இறப்பு எப்படி நிகழும் என்று கணிக்கவே முடியாது!
திருமங்கலம் அருகே அந்த ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், முகேஷ் பேருந்துக்குள்ளேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.

மனிதனுக்கு எந்த நேரத்திலும், எந்த வயதிலும், எந்த சூழலிலும் மரணம் ஏற்படலாம் என்பதை நிரூபித்துள்ளது தென்காசியை சேர்ந்த முகேஷ் என்பவருடைய வாழ்க்கை. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்து உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் தான் முகேஷ். சென்னையில் பணிபுரிந்து வரும் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது உறவினர் வீட்டில் நடக்கவிருந்த ஒரு வைபோகத்தில் பங்கேற்க கடந்த சனிக்கிழமை இரவு சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்தில் புறப்பட்டுள்ளார்.
அந்த ஆம்னி பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் மதுரை சென்று அடைந்துள்ளது. அப்பொழுது திடீரென பேருந்தை விட்டு கீழே இறங்கிய முகேஷ், தொடர்ச்சியாக வாந்தி எடுத்துள்ளார். ஆனால் பயணத்தின்பொழுது தலை சுற்றலும், வாந்தியும் வருவது இயற்கை தான் என்று எண்ணி தொடர்ச்சியாக தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார் முகேஷ்.
யானைகளை துரத்திச் சென்ற வாகன ஓட்டிகள்; ஒரே பார்வையில் அனைவரையும் அலறவிட்ட காட்டு யானை
இந்நிலையில் திருமங்கலம் அருகே அந்த ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், முகேஷ் பேருந்துக்குள்ளேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை அடுத்து உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்க, அங்கு வந்து பரிசோதனை செய்த ஆம்புலன்ஸில் இருந்த துணை மருத்துவர்கள், முகேஷ் இறந்து விட்டதாக அறிவித்தனர்.
உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முகேஷ் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பேருந்தும் அதில் பயணித்தவர்களையும் அழைத்து விசாரித்து அதன் பிறகு அவர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்பொழுது முகேஷின் உடல் அவருடைய உறவினர்களிடம் அளிக்கப்பட்டுவிட்டதா? அவர் இறப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. மகிழ்ச்சியோடு தனது இல்ல நிகழ்ச்சிக்கு புறப்பட்ட ஒரு வாலிபருக்கு ஏற்பட்ட இந்த நிலை தென்காசி முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திடீரென சாலையை கடந்த வெள்ளை நிற பாம்பு; ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்