ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம் பொறியாளர்; துக்கத்தில் விபரீத முடிவு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம் பொறியாளர் குளியலறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

young engineer commit suicide who loss his money at online gambling in dharapuram vel

தாராபுரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சம் பணம் இழந்த துக்கத்தில் பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தாராபுரம் காவல் துறைியனர் கூறியிருப்பதாவது:- தாராபுரம் அடுத்த கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கவின்குமார் (வயது 23). பொறியியல் பட்ட படிப்பை முடித்து விட்டு மூலனூரில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவர் அடிக்கடி ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் கட்டி விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஆன்லைன் சூதாட்டம் விளையாட ரூ.3 லட்சம் கடன் வாங்கி பந்தயம் கட்டி விளையாடி வந்த நிலையில் மொத்த பணத்தையும் பந்தயத்தில் இழந்துள்ளார்.

சாரட்டு வண்டியில் சீர் வரிசைகளுடன் அழைத்து வரப்பட்ட தவளைகள்; மழை வேண்டி  மக்கள் வினோத வழிபாடு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனால் கடந்த சில நாட்களாக பணத்தை இழந்த சோகத்தில் மனமுடைந்து சோகமாக இருந்து வந்துள்ளார். சோகத்தில் மனமுடைந்த கவின்குமார் நேற்று முன்தினம் இரவு குளியலறைக்கு சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய தம்பி கவின்குமார் நீண்ட நேரமாக வெளியில் வராத நிலையில் குளியலறைக்கு சென்று பார்த்துள்ளார். 

மதுரையில் மீனாட்சி அம்மன் சிலை மீது அமர்ந்து அம்மனை கொஞ்சி மகிழ்ந்த பச்சை கிளி; பக்தர்கள் பரவசம்

அப்போது தனது அண்ணன் தூக்கில் தொங்கியதை கண்ட தம்பி சத்தம் போட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அருகாமையில் இருந்தவர்கள் உடனடியாக கவின்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாராபுரம் பகுதியில் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம் பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios