Asianet News TamilAsianet News Tamil

சாரட்டு வண்டியில் சீர் வரிசைகளுடன் அழைத்து வரப்பட்ட தவளைகள்; மழை வேண்டி மக்கள் வினோத வழிபாடு

கோவையில் மழை வேண்டி ஊர் மக்கள் ஊர் மக்கள் ஒன்று திரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த வினோத வழிபாடு மேற்கொண்டனர்.

Villagers married frogs to pray for rain in Coimbatore vel
Author
First Published Oct 12, 2023, 8:38 AM IST

கோவையில் தற்பொழுது கடுமையான வெயில் வாட்டில் வதைத்து வருகிறது. இந்நிலையில் கோவையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டியும், பொதுமக்கள் நலமாக இருக்க வேண்டி வேடப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி ஆண் தவளைக்கு மாப்பிள்ளை போல் வேடம் அணிந்து குரும்பபாளையம் வீதி வழியாக மாப்பிள்ளை ஊர்வலம் மேளதாளம் முழங்க நடைபெற்றது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தொடர்ந்து குரும்பபாளையம் ஊர் கவுண்டர் வீட்டில் பெண் தவளைக்கு சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டு பெண் அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து குரும்பபாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் ஊர் பொதுமக்கள் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். அப்பொழுது கூடி இருந்த பொதுமக்கள் மங்கள அரிசியை தூவி வாழ்த்தினார். பின்னர் மஞ்சள் நீர் தொட்டியில் தவளைகள் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் ஊரை சுற்றி வந்து தவளைகள் குடும்பம் நடத்துவதற்காக கிணற்றில் விடப்பட்டது. இந்த நிகழ்ச்சி 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்று உள்ளது. இந்த ருசிகர சம்பவத்தை காண ஏராளமான மக்கள் திரண்டனர்.

சென்னையில் பிரபல கூலிப்படை தலைவன் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக்கொலை.. யார் இந்த முத்து சரவணன் தெரியுமா?

இதற்காக ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று உணவு சேகரித்து அதை முனியப்பன் கோவிலில் படைத்து மூன்று கன்னிப் பெண்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன் மழை வேண்டி குரும்ப்பாளையம் ஊரில் உள்ள துரை வீரசாமி கோவிலில் கிடா வெட்டி படையல் வைத்து பூஜை நடைபெறும். இரவு சாலையில் பொதுமக்கள் அமர்ந்து படையல் சாப்பிடும் நிகழ்ச்சி  நடைபெறும். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் மழை பெய்யும் என்பது ஐதீகம்.

Follow Us:
Download App:
  • android
  • ios