Asianet News TamilAsianet News Tamil

விட்டுருப்பாரா கருணாநிதி...! ஜெ இல்லாததால் இப்படியும் நடக்குமா..?

திமுகவில் ஸ்டாலின் லாபி கிடையாது. கனிமொழி லாபி கிடையாது. மாறன் லாபி கிடையாது. ஒரே ஒரு பாட்ஷாதான் என்பது போல, திமுகவின் ஒரே ஒரு சூரியனான கருணாநிதியின் நேரடி லாபியில்தான் இருந்தார். தற்போது மீடூ சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கும் கள்ளிக்காட்டு கவிஞர் வைரமுத்து.
 

without jayalalitha and karunanidhi sinmaye issues goes in different way
Author
Chennai, First Published Oct 17, 2018, 3:56 PM IST

திமுகவில் ஸ்டாலின் லாபி கிடையாது. கனிமொழி லாபி கிடையாது. மாறன் லாபி கிடையாது. ஒரே ஒரு பாட்ஷாதான் என்பது போல, திமுகவின் ஒரே ஒரு சூரியனான கருணாநிதியின் நேரடி லாபியில்தான் இருந்தார். தற்போது மீடூ சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கும் கள்ளிக்காட்டு கவிஞர் வைரமுத்து.

திமுக அரசானாலும் சரி, அதிமுக அரசானாலும் சரி, முக்கிய பத்திரிகை உரிமையாளர்கள் ஆனாலும் சரி அவருக்கான டெம்ப்போவை மிக அருமையாகவும் கச்சிதமாகவும், மெயின்டெயின் செய்து வந்தார் வைரமுத்து. திமுகவில் கருணாநிதி சரி... அதெப்படி அதிமுகவில் வைரமுத்துவின் பேச்சு எடுபட்டது? என கேள்வி எழலாம்.

without jayalalitha and karunanidhi sinmaye issues goes in different way

அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா மற்றும் குடும்பத்தினர் நடராஜன் மூலமாக நல்ல அன்டர்ஸ்டாண்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இப்படி திமுகவின் தலைமையும் அதிமுகவின் நிழல் தலைமையையும் கையில் வைத்துக் கொண்டிருந்ததால் வைரமுத்து காட்டில் என்றுமே மழைக்கு பஞ்சமே இருந்ததில்லை. 

பொருளாதார ரீதியாகவும் சரி, முன்னிருக்கையில் மரியாதையைப் பெற்றுக் கொள்வதிலும் சரி கடந்த 25 ஆண்டுகளாகவே வைரமுத்து யாரும் தொட முடியாத அளவிற்குத்தான் இருந்தார். 

without jayalalitha and karunanidhi sinmaye issues goes in different way

ஜெயலலிதா மறைந்து, கருணாநிதியும் மறைந்தார். ஓயத்தொடங்கியது வைரமுத்துவின் புகழ். 

கருணாநிதியின் மறைவுக்கு அடுத்த நாளே, முற்போக்கு வாதியான கருணாநிதியின் சமாதிக்கு பால் ஊற்றி புதிய பஞ்சாயத்தை ஏற்படுத்தினார். இதை திமுக தலைவர் ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் சுத்தமாக விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. கருணாநிதியிடம் மட்டுமே தனது உறவை நேரடியாக மேம்படுத்தி வந்த வைரமுத்து, குடும்பத்தினரை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தார்.

without jayalalitha and karunanidhi sinmaye issues goes in different way

 கருணாநிதிக்குப் பிறகு குடும்பத்தினரும் வைரமுத்துவை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.

இதே நேரத்தில் கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் வைரமுத்துவுக்கு இந்த சிக்கலே வந்திருக்காது. அப்படி வந்திருந்தாலும், கருணாநிதியின் ஆலோசனையின் மூலமும், பின்னணியில் செய்ய வேண்டிய சிலபல கச்சிதமான வேலைகளையும் செய்து முடித்து வைரமுத்துவை 'சேஃப்' ஆக வைத்திருப்பார் என அவரது நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

திமுக ஒருபுறம் இருக்க.. மற்றொரு புறம் அதிமுக. என்னதான் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் நடராஜன் மூலமாக வைரமுத்து உறவை மேம்படுத்தி வந்தாலும், பெண் விஷயம் என்பதால், ஜெயலலிதாவிடம் யார் சொல்வதும் எடுபட்டிருக்காது. சின்மயி தவறி போலீசில் புகார் கொடுத்திருந்தால் ஜெயலலிதா நிச்சயம் வைரமுத்து மீது நடவடிக்கை எடுத்திருப்பார்.

 எந்த தயக்கத்தையும் காட்டியிருக்க மாட்டார். பாரபட்சமின்றி இத்தனை குற்றச்சாட்டுகளும் உண்மைதானா என்று தீவிர விசாரணையையும் முடுக்கி விட்டிருப்பார் என்கின்றனர் மீடியா மற்றும் போயஸ் கார்டன் வட்டாரத்தில் நெருங்கி இருந்தவர்கள்.

எது எப்படியோ, கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அரசியல்வாதிகள் எப்படி தைரியமாக பேசி வருகின்றனறோ அதே போன்றுதான் தூங்கிக் கொண்டிருந்த சிங்கங்கள் எல்லாம் வெளியே வருவதுபோல சினிமா துறையினரும் மீடூ ஆயுதத்தை கையில் எடுத்து போட்டு தாக்கி வருகின்றனர். இதில் அதிகமாக சிக்கி சின்னாபின்னமாகி வருபவர் வைரமுத்துதான். பொறுத்திருந்து பார்க்கலாம் வைரமுத்து - சின்மயி எந்தளவுக்கு வெடிக்கிறது அல்லது புஷ்வானமாக போகிறது என்பதை...!

Follow Us:
Download App:
  • android
  • ios