கலாஷேத்திரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! தேசிய மகளிர் ஆணையம் மவுனம் காப்பது ஏன்..? மாதர் சங்கம் கேள்வி
கலாஷேத்ரா நுண்கலை கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்திஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து போராட்டம் நடைபெற்றது.
கலாஷேத்திரா- பாலியல் தொல்லை
சென்னை திருவான்மியூர் உள்ள கலாஷேத்திரா வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பேராசிரியர்கள் உள்பட 4 பேர் பாலியல் துன்புறுத்தல்கள் செய்ததாக 150க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் கடந்த சில நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து முன்னாள் மாணவி கொடுத்த புகாரில் பேராசிரியர் ஹரிபத்மன் 3 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரி பத்மனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள மேலும் மூவரையும் கைது செய்ய வேண்டும், புகார் மீது நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் மாணவிகளை அச்சுறுத்துவதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி,
பாஜக கூட்டணியில் அதிமுக போட்டி.? கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 3 இடங்களை கேட்கும் இபிஎஸ்
மவுனம் காப்பது ஏன்.?
திருவான்மியூர் சிக்னல் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தின. இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆர்.ராதிகா,அநியாயம், அத்து மீறல், பாலியல் வன்கொடுமை எங்கு நடந்தாலும் அங்கெல்லாம் தலையிடுவோம். கல்லூரி நிர்வாகம் குறிப்பிட்ட மாணவிகளிடம் மட்டும் விசாரித்துவிட்டு, தேசிய மகளிர் ஆணையம் தனது விசாரணையை கைவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் விசாரணையை கைவிட்டதாக அறிகிறோம். இதனை ஏற்க முடியாது. எதற்கெடுத்தாலும் ஓடி வந்து பரபரப்பு விசாரணை நடத்தும் தேசிய மகளிர் ஆணையம் இப்போது ஏன் மவுனம் காக்கிறது. மகளிர் ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்க வேண்டும் என இந்த போராட்டத்தின் போது வலியறுத்தப்பட்டது.
இதையும் படியுங்கள்
அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு கேட்ட ஓபிஎஸ்..! நிராகரித்த நீதிபதிகள்.. நடந்தது என்ன?