அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு கேட்ட ஓபிஎஸ்..! நிராகரித்த நீதிபதிகள்.. நடந்தது என்ன?

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இறுதி விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது

Judges rejected OPS plea seeking interim order in AIADMK general committee case

அதிமுக பொதுக்குழு தீர்மானம்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்போரட்டம் நடத்தி வருகிறார். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மேல் முறையீடு செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

பாஜக கூட்டணியில் அதிமுக போட்டி.? கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 3 இடங்களை கேட்கும் இபிஎஸ்

Judges rejected OPS plea seeking interim order in AIADMK general committee case

இடைக்கால உத்தரவு கேட்ட ஓபிஎஸ்

கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மேல் முறையீட்டு வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா? இடைக்கால உத்தரவு  பிறப்பிப்பதா? என்பதை இன்று முடிவு செய்வதாக நீதிபதிகள் கூறியிருந்தனர். இன்று, இந்த மேல் முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணை நடத்தலாம். அதற்குரிய  தேதியை தெரிவிக்கும்படி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்களையும் கேட்டுக் கொண்டனர்.

Judges rejected OPS plea seeking interim order in AIADMK general committee case

இதற்கு பன்னீர்செல்வம் அணியினர் தரப்பு வழக்கறிஞர்கள், அதிமுகவில் தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடப்பதாகவும், தங்கள் ஆதரவாளர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். எனவே இந்த வழக்கில்  இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். ஆனால், தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்படும் என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இடைப்பட்ட காலத்தில் கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனத் தெரிவித்தனர்.பின்னர், வழக்குகளின் இறுதி விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படியுங்கள்

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ அங்கீகரிக்க கூடாது.. தேர்தல் ஆணையத்தில் பறந்த மனுவால் சிக்கல்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios