பாஜக கூட்டணியில் அதிமுக போட்டி.? கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 3 இடங்களை கேட்கும் இபிஎஸ்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 2 அல்லது 3 தொகுதிகளில் பாஜக கூட்டணியில் போட்டியிட அதிமுக விருப்பம் தெரிவித்துள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார், பெங்களூர் நகர் பகுதிக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடவும் அதிமுக தங்களது விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல்
கர்நாடாக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற பாஜக-காங்கிரஸ் இடையே கடும் மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. தென்மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால் அங்கு எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில் பாஜக மிக உறுதியாக உள்ளது. இதற்காக மத்திய பாஜக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. பிரதமர் மோடி 10க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற திட்டம் வகுக்கப்பட்டு்ள்ளது. அதே போல ராகுல் காந்தி, சோனியாவும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
காங்கிரஸ் வெற்றி பெறும்.?
இதனிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 118-129 இடங்களில் வெல்லும் என்றும், பா.ஜ.க. 65-70 இடங்களைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கருத்து கணிப்பு பாஜகவிற்கு எதிராக இருப்பதால் வேட்பாளர்களை பார்த்து, பார்த்து களத்தில் இறக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முழுமையான வேட்பாளர் பட்டியல் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பிறகு அதன் பின்னரே வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கூறியிருந்தார். இந்தநிலையில் கர்நாடக தேர்தலில் அதிமுகவும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனியாக போட்டியிட்டால் 10 தொகுதிகளில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
பாஜக கூட்டணியில் அதிமுக
இந்தநிலையில், பாஜக கூட்டணியில் போட்டியிட அதிமுக விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார், பெங்களூர் நகர் பகுதிக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட அதிமுக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கார்நாடக மாநிலத் தேர்தலில் கடும் போட்டி நிலவி வருவதால் அதிமுகவிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவது என்பது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்