அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ அங்கீகரிக்க கூடாது.. தேர்தல் ஆணையத்தில் பறந்த மனுவால் சிக்கல்.!

 எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆணவங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

EPS should not be recognized as AIADMK General Secretary.. Petition in Election Commission

உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது. ஆனால், அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பதை உயர்நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதையும் படிங்க;- ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு மீண்டும் இன்று விசாரணை.. இடைக்கால நிவாரணமா? அல்லது இறுதி விசாரணையா? பீதியில் இபிஎஸ்

EPS should not be recognized as AIADMK General Secretary.. Petition in Election Commission

இதனையடுத்து, ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி. பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி குமரேஷ் பாபு அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்று கூறி ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 

EPS should not be recognized as AIADMK General Secretary.. Petition in Election Commission

அன்றைய தினமே அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதனிடையே, தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இது தொடர்பான வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆணவங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- அதிமுக பொதுச்செயலாளரான இபிஎஸ்.. தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள்.. ஓபிஎஸ் என்ன செய்யப்போகிறார்?

EPS should not be recognized as AIADMK General Secretary.. Petition in Election Commission

 இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி மனு அளித்துள்ளனர். அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை, பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்கக் கூடாது. அதிமுக உறுப்பினர் அட்டையை மீண்டும் இணையதளம் மூலம் வினியோகிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ அங்கீகரிக்கக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios