அதிமுக பொதுச்செயலாளரான இபிஎஸ்.. தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள்.. ஓபிஎஸ் என்ன செய்யப்போகிறார்?
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது. ஆனால், அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பதை உயர்நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க;- என்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்தது மட்டும் எப்படி சரியாகும்? பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்! காரசார வாதம்
இதனையடுத்து, ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி. பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி குமரேஷ் பாபு அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்று கூறி ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.
அன்றைய தினமே அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர். இதனிடையே, தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க;- அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறதா? எடப்பாடி பழனிசாமி சொன்ன ஒற்றை வார்த்தை..!
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆணவங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரிகள் என அனைவருக்கும் ஆவணங்கள் இமெயில் மற்றும் தபால் மூலம் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் இதுதொடர்பாக ஓ. பன்னீர் செல்வம் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதலாம் என கூறப்படுகிறது.