அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறதா? எடப்பாடி பழனிசாமி சொன்ன ஒற்றை வார்த்தை..!
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. விடியா ஆட்சியில் விழுப்புரத்தில் கஞ்சா போதையில் படுகொலை நிகழ்ந்துள்ளது. எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா தாராளமாக புழக்கத்தில் இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கின்றது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 68 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், அதிமுக ஆட்சியில் 100 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டதில் 27 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய நிதியமைச்சருக்கு கண்டனம் என இபிஎஸ் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து வேண்டுமென்றே தவறான தகவல்களை நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் மாநகராட்சி பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தில் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது.
இதையும் படிங்க;- தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது... அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த அமித்ஷா
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. விடியா ஆட்சியில் விழுப்புரத்தில் கஞ்சா போதையில் படுகொலை நிகழ்ந்துள்ளது. எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா தாராளமாக புழக்கத்தில் இருக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளது. அம்மா உணவகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. அம்மா உணவகத்தில் வழங்கும் உணவு தரமில்லை என்று கூறினால் ஆதாரம் கொடு என்று கேட்கிறார்கள்.
இதையும் படிங்க;- வெயிலால் ஸ்கூலுக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் தவிக்கிறாங்க.. உடனே எக்ஸாம் நடத்தி லீவு விடுங்க.. அன்புமணி.!
பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதை ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும் அதை உறுதி செய்துள்ளார்.