தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது... அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த அமித்ஷா

தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் என் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என அண்ணாமலை பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tamil Nadu BJP is in AIADMK alliance... Union Home Minister Amit Shah

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி அனைவரும் மத்தியில் எழுந்து வந்த நிலையில் அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
 
அதிமுக பாஜகவுக்கு இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெறுவதற்குரிய உத்திகள் என்னிடம் உள்ளது. ஒருவேளை தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் என் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என அண்ணாமலை பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tamil Nadu BJP is in AIADMK alliance... Union Home Minister Amit Shah

இதற்கு பாஜகவின் மூத்த தலைவர்கள் கூட்டணி குறித்து முடிவு செய்வது தேசிய தலைமை தான் என்று கருத்து தெரிவித்தனர். இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்குமா என்ற சந்தேகம் அனைவரின் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா;- ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் பாஜக பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவரைப் பற்றி ராகுலின் பாட்டி இந்திரா காந்தி கூறியவற்றை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். 

Tamil Nadu BJP is in AIADMK alliance... Union Home Minister Amit Shah

வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெருபான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி ஆவார். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் பாஜக  இருக்கிறது என அமித்ஷா கூறியுள்ளார். இதனையடுத்து, அதிமுக பாஜக கூட்டணி சர்ச்சைகள் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios