ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு மீண்டும் இன்று விசாரணை.. இடைக்கால நிவாரணமா? அல்லது இறுதி விசாரணையா? பீதியில் இபிஎஸ்

ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கட்சியில் இருந்து நீக்கியது தவறு எனத் தெரிவித்த  தனி நீதிபதி, இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவில்லை. இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

OPS appeal case hearing again today.. Interim relief?

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி குமரேஷ் பாபு கடந்த 28ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி.பிரபாகர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு  வந்தது. 

இதையும் படிங்க;- என்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்தது மட்டும் எப்படி சரியாகும்? பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்! காரசார வாதம்

OPS appeal case hearing again today.. Interim relief?

அப்போது,  வழக்குகளை இறுதி  விசாரணைக்கு எடுத்து, வாதங்களை கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கும் சம்மதமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கட்சியில் இருந்து நீக்கியது தவறு எனத் தெரிவித்த  தனி நீதிபதி, இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவில்லை. இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. என்னை நீக்கியது தவவென்றால் அதன்பின் நடந்தது மட்டும் எப்படி சரியாகும் என்றும் வாதிட்டார்.

OPS appeal case hearing again today.. Interim relief?

வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்ம், ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என வாதிட்டனர்.

பின்னர் அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்;- கட்சியில் தற்போது ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை. பொதுச்செயலாளர் பதவி மட்டுமே உள்ளதாகவும்,  பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்றுள்ளதாக தெரிவித்தார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சி மற்றும் அதன் தொண்டர்களை தயார்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதால்  பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தபட்டதாக விளக்கமளித்தார்.

இதையும் படிங்க;-  எதற்கும் அஞ்சமாட்டோம்! அதிமுகவை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்! போறபோக்கில் ஓபிஎஸ்-ஐ விளாசிய இபிஎஸ்!

OPS appeal case hearing again today.. Interim relief?

கட்சியில் 95% பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுள்ளனர். நோட்டீஸ் கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் உள்ளது.  பலமுறை ஆளும்கட்சியாகவும், தற்போது எதிர்க்கட்சியாகவும் உள்ள ஒரு கட்சி தேர்தலை திறம்பட சந்திக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.  சட்டமன்றத்திலும் ஓபிஎஸ் அணியினரின் இருக்கையை மாற்றக் கோரி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 
மேலும் ஒரு வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ய குறைந்தபட்சம் 10 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஒபிஎஸ் எப்படி போட்டியிட முடியும் என தெரிவித்தார். இடைக்கால நிவாரணம் ஏதும் அளிக்க வேண்டியது இல்லை. வழக்கை இறுதி விசாரணைக்கு பட்டியலிடலாம் என அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

OPS appeal case hearing again today.. Interim relief?

பின்னர் அனைத்து தரப்பினரும் இறுதி விசாரணைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து, வழக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 3ம் தேதி ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, இடைக்கால நிவாரணமா? அல்லது இறுதி விசாரணையா? என்பது தெரியவரும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios